பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
284

கள

 பகற் குறி

    களிநீ யெனச்செய் தவன்கடற்
        றில்லையன் னாய்கலங்கல்
    தெளிநீ யனையபொன் னேபன்னு
        கோலந் திருநுதலே.

13.8 உண்மகிழ்ந்துரைத்தல்

   
உண்மகிழ்ந்துரைத்தல் என்பது பாங்கியறிவுரைப்பக் கேட்ட தலைமகள், இனி நமக்கொரு குறையில்லையென வுட்கொண்டு முகமலராநிற்ப, அம்முகமலர்ச்சி கண்டு, அவளைக் கழுநீர்மலராகவும், தான் அதனறவைப் பருகும் வண்டாகவும் புனைந்து, தலைமகன் றன்னுண்மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

123. செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம்
        பலவன் திருக்கழலே
    கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி
        வாய்க்கொள்ளுங் கள்ளகத்த

_____________________________________________________________

யான்பிறிதோர் கோலஞ் செய்தேனென்று கலங்க வேண்டா; தெளி-தெளிவாயாக எ-று.

    தண்ணறவுண்களி நீயெனச் செய்தவ னென்பதற்குப் பிறிது ரைப்பாருமுளர். பொன்னேயென்னு மேகாரம்: பிரிநிலையேகாரம். அணிமணியுமென்பதூஉம் பாடம். பாங்கியறிவு - பாங்கியவ்வொழுக்கத்தை- யறிந்த வறிவு. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: பாங்கியறிந்தமை தலைமகட்குணர்த்துதல்.

122

13.8.  தண்மலர்க் கோதையை
     உண்மகிழ்ந் துரைத்தது.


   
இதன் பொருள்: செழுநீர் ‘மதிக் கண்ணிச் சிற்றம்பலவன் திருக்கழலே-வளவிய நீர்மையையுடைய மதியாகிய கண்ணியையுடைய சிற்றம்பலவனது திருக்கழல்களையே; கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும்-பொருந்து நீர்மையான் உண்மகிழ்ந்து முகமலர்வது போலப் போதாகிய நிலைமையை விட்டு மலராம் நிலைமையையடைந்து சிறிதே மலரத்தொடங்கும்; கள்