பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
285

 பகற் குறி

    கழுநீர் மலரிவள் யானதன்
        கண்மரு விப்பிரியாக்
    கொழுநீர் நறப்பரு கும்பெரு
        நீர்மை யளிகுலமே.

123

______________________________________________________________

அகத்த கழுநீர்மலர் இவள் - தேனை யகத்துடைய கழுநீர் மலர் இவள்; யான் அதன்கண் மருவிப் பிரியாக் கொழுநீர் நறப்பருகும் பெருநீர்மை அளிகுலம்-யான் அக்கழுநீர் மலர்க்கண் மருவி ஒருகாலும் பிரியாத கொழுவிய நீர்மையையுடைய அந்நறவைப்பருகும் பெருந்தன்மையையுடைய தோரளிசாதி எ-று.

   
செழுநீர்மதிக்கண்ணி யென்பதற்கு வளவியநீரு மதியாகிய கண்ணியுமென்பாருமுளர். திருக்கழலே யென்னுமேகாரம்; பிரிநிலை யேகாரம். செழுநீர்மையையுடைய கழுநீர் மலரென்றியைப்பினுமமையும். சென்று கிண்கிணிவாய்க் கொள்ளுமென்பதனால், பேதைப் பருவங் கடந்து இன்பப்பருவத்த ளாயினாளென்பது விளங்கும். கள்ளகத்தவென்பதனால், புலப்படா துண்ணிறைந்த காதலளென்பது விளங்கும். கள்ளகத்த கழுநீர் மலரென்பது “காலகுருகு” (குறுந்-25) என்பதுபோல நின்றது; பெயரெச்ச மெனினுமமையும். யான் மருவிப் பிரியாத அளிகுலமெனினுமமையும். நறா: குறுகி நின்றது. பெருநீர்மை அளிகுலமென்றான், கழுநீர் மலரல்ல தூதாமையின். அதனால், பிறிதோரிடத்துந் தன்னுள்ளஞ் செல்லாமை விளங்கும். மெய்ப்பாடு: உவகை. பயன்: நயப்புணர்த்துதல்.

123