13
பகற்
குறி
13.9 ஆயத்துய்த்தல்
ஆயத்துய்த்தல் என்பது மலரளிமேல்வைத்து
மகிழ்வுற்றுப் பிரிய லுறாநின்ற தலைமகன், யாமித்தன்மையேமாதலின், நமக்குப் பிரிவில்லை, இனி
யழகிய பொழிலிடத்து விளையாடும் ஆயம் பொலிவுபெறச் சென்று, அவரோடு சேர்ந்து விளையாடுவாயெனத்
தலைமகளை யாயத்துச் செலுத்தா நிற்றல். அதற்குச் செய்யுள்-
124. கொழுந்தா ரகைமுகை
கொண்டலம்
பாசடை விண்மடுவில்
எழுந்தார் மதிக்கம லம்மெழில்
தந்தென இப்பிறப்பில்
அழுந்தா வகையெனை ஆண்டவன்
சிற்றம் பலமனையாய்
செழுந்தா தவிழ்பொழி லாயத்துச்
சேர்க திருத்தகவே.
124
____________________________________________________________
13.9.
கனைகடலன்ன கார்மயிற்கணத்துப்
புனைமடமானைப் புகவிட்டது.
இதன் பொருள்: இப்பிறப்பில்
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் - இப்பிறவியின்கணழுந்தா வண்ணமென்னையடிமை
கொண்டவனது சிற்றம்பலத்தை யொப்பாய்; கொழுந்தாரகை முகை கொண்டல் பாசடை விண் மடுவில் -
கொழுவிய தாரகையாகிய முகையையுங் கொண்டலாகிய பசிய விலையையுமுடைய விண்ணாகிய மடுவின்கண்;
எழுந்து ஆர் மதிக் கமலம் எழில் தந்தென - எழுந்து நிறைந்த மதியாகிய வெண்டாமரைப் பூத்தன தெழிலைப்
புலப்படுத்தினாற்போல; செழுந் தாது அவிழ்பொழில் ஆயத்துத் திருத்தகச் சேர்க - வளவிய தாதவிழாநின்ற
பொழிற்கண் விளையாடுகின்ற ஆயத்தின்கட் பொலிவு தக இனிச்சேர்வாயாக எ-று.
முகையோடு தாரகைக்கொத்தபண்பு
வெண்மையும் வடிவும் பன்மையும். தாரகையோ டாயத்தார்க்கொத்தபண்பு பன்மையும் ஒன்றற்குச் சுற்றமாய்
அதனிற்றாழ்ந்து நிற்றலும். கமலத்தோடு மதிக்கொத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலியும். மதியோடு
|