பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
287

13

 பகற் குறி

13.10 தோழிவந்து கூடல்

தோழிவந்து கூடல் என்பது தலைமகனைப் பிரிந்த தலைமகடானும் பூக்கொய்யாநின்றாளாகப் பிரிவாற்றாமையானும் பெருநாணினானுந் தடுமாறி மொட்டுக்களைப் பறியாநிற்ப, யானின் குழற்காம் பூக்கொண்டு வந்தேன், நீ விரல்வருந்த மொட்டுக்களைப் பறிக்கவேண்டாவெனத் தோழிவந்து கூடா நிற்றல். அதற்குச் செய்யுள்-

125. பொன்னனை யான்தில்லைப் பொங்கர
        வம்புன் சடைமிடைந்த
    மின்னனை யானருள்மேவலர்
        போன்மெல் விரல்வருந்த
    மென்னனை யாய்மறி யேபறி
        யேல்வெறி யார்மலர்கள்
    இன்னன யான்கொணர்ந் தேன்மணந்
        தாழ்குழற் கேய்வனவே.

125

____________________________________________________________

தலைமகட்கொத்தபண்பு கட்கினிமையும் சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறொத்தபண்பு வேறுபடுதலான் உவமைக் குவமை யாகாமை யறிந்துகொள்க. கொண்டலம் பாசடையென்புழி அம்முச்சாரியை அல்வழிக்கண் வந்தது; அம் - அழகெனினுமமையும். புனைமடமான்-கைபுனையப்பட்டமான். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புறத்தாரறியாமைப் பிரிதல்.

124.

13.10. நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப்
      பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.


   
இதன் பொருள்: ஆய் மறியே - அசைந்த மான்மறிபோல்வாய்; பொன் அனையான் - பொன்னையொப்பான்; தில்லைப் பொங்கு அரவம் புன்சடை மிடைந்த மின் அனையான் - தில்லைக் கணுளனாகிய வெகுளாநின்ற வரவம் புல்லிய சடைக்கண் மிடைந்த மின்னையொப்பான்; அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த - அவனதருளைப் பொருந்தாதாரைப் போல மெல்லிய விரல்கள் வருந்த; மெல் நனை பறியேல் - மென்னனைகளைப் பறியா தொழிவாயாக; மணம் தாழ் குழற்கு ஏய்வன வெறி ஆர் மலர்கள் இன்னன யான் கொணர்ந்தேன்-நின்மணந்தங்கிய குழற்குப்