13
பகற்
குறி
13.27 இரக்கமுற்றுவரைவுகடாதல்
இரக்கமுற்று வரைவு கடாதல் என்பது
வேங்கையொடு வெறுத்து வரைவுகடாயதோழி, யாமவனை யெதிர்ப்படலா மென்றின்புற்று வளர்த்த தினைத்திரள்
இப்புனத்தின்கணில்லா வாயிருந்தன; இனி நாமவனை யெதிர்ப்படுமாறென்னோவெனச் சிறைப்புறமாகத்
தலைமகனுக்கிரக்கமுற்று வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-
142. வழுவா இயலெம் மலையர்
விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின்
குழாங்களெல்
லாமெங் குழாம்வணங்குஞ்
செழுவார் கழற்றில்லைச்
சிற்றம்
பலவரைச் சென்றுநின்று
தொழுவார் வினைநிற்கி லேநிற்ப
தாவதித் தொல்புனத்தே.
142
__________________________________________________
13.27. செழுமலை நாடற்குக்
கழுமலுற் றிரங்கியது.
இதன் பொருள்: வழுவா இயல்
எம் மலையர் விதைப்ப-விதைக்கும் பருவத்துங் கொய்யும்பருவத்தும் வழுவாது செய்யுமியல்பையுடைய எந்தமராகிய
மலையர் விதைப்ப; யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல்லாம்-யாம்வளர்த்த
கொழுவிய நெடிய தினையின் திரட்களெல்லாம்; எம் குழாம் வணங்கும் செழுவார் கழல் தில்லைச்
சிற்றம்பலவரை-எமது குழாஞ்சென்று வணங்கும் வளவிய நெடிய கழலையுடைய தில்லையிற் சிற்றம்பலத்தையுடையானை;
சென்று நின்று தொழுவார் வினை நிற்கிலே-சென்று நின்று தொழுவாருடைய வினை அவர்கண் நிற்கிலே;
இத்தொல் புனத்து நிற்பது ஆவது-இப்பழைய புனத்தினிற்ப தாவது; இனிநில்லா எ-று.
குழாங்களெல்லா நிற்பதாவதெனக்கூட்டுக.
நிற்பதென்பது நிற்றலென்னும் பொருட்டு. நிற்பதாவவென்பது பாடமாயின், ஆவவென்பதிரங்கற்
குறிப்பாக வுரைக்க, நிற்பவென்பதூஉம் பாடம். குழுவார்தினையென்பதூஉம் பாடம்.
142
|