13
பகற்
குறி
13.28 கொய்தமைகூறி
வரைவுகடாதல்
கொய்தமைகூறி வரைவுகடாதல் என்பது
இரக்கமுற்று வரைவுகடாயதோழி எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத்தினையுள்ளது இன்றுதொடர்பறக்கொய்தற்றது;
எமக்குமினிப்புனங்காவலில்லை; யாமுமக்கறிவு சொல்லுகின்றேமல்லேம்; நீரேயறிவீரெனத்தினை
கொய்தமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
143. பொருப்பர்க்
கியாமொன்று மாட்டேம்
புகலப் புகலெமக்காம்
விருப்பர்க் கியாவர்க்கு
மேலர்க்கு
மேல்வரு மூரெரித்த
நெருப்பர்க்கு நீடம்
பலவருக்
கன்பர் குலநிலத்துக்
கருப்பற்று விட்டெனக்
கொய்தற்ற
தின்றிக் கடிப்புனமே.
143
________________________________________________
13.28. நீடிரும்புனத்தினி யாடேமென்று
வரைவுதோன்ற வுரைசெய்தது.
இதன் பொருள்: எமக்குப்
புகலாம் விருப்பர்க்கு-எமக்குப் புகலிடமாதற்குக் காரணமாகிய விருப்பத்தையுடையவர்க்கு; யாவர்க்கும்
மேலர்க்கு-எல்லார்க்கு மேலாயவர்க்கு; மேல் வரும் ஊர் எரித்த நெருப்பர்க்கு-ஆகாயத்தின்கட்
செல்லுமூர்களையெரித்த நெருப்பை யுடையவர்க்கு; நீடு அம்பலவருக்கு-நிலைபெற்ற வம்பலத்தையுடையவர்க்கு;
அன்பர் குலம் நிலத்துக்கருப்பற்று விட்டென-அன்பராயினாருடைய குலங்கள் உலகத்துப் பிறவிக்காரணத்தைப்
பற்றுவிட்டகன்றாற் போல; இக்கடிப்புனம் இன்று கொய்தற்றது-இக்காவலையுடைய புனம் இப்பொழுது தொடர்பறக்
கொய்தற்றது. அதனால்-பொருப்பர்க்கு யாம் ஒன்றும் புகலமாட்டேம்-பொருப்பர்க் கியாமொன்றுஞ்
சொல்லமாட்டேம் எ-று.
யாமொரு குணமுமில்லேமாயினுந்
தமது விருப்பினாலெமக்குப் புகலிடமாயினாரென்னுங் கருத்தால், புகலெமக்காம் விருப்பர்க் கென்றார்.
எம்மால் விரும்பப்படுவார்க் கென்பாருமுளர். வீடென வென்பதூஉம் பாடம்.
143
|