13
பகற்
குறி
13.29 பிரிவருமைகூறி
வரைவுகடாதல்
பிரிவருமை கூறி வரைவு கடாதல் என்பது
கொய்தமைகூறி வரைவு கடாய தோழி, இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத் துப்பாகாக் காலத்துந்
தினைத்தாளை விடாதிராநின்றன; நாம் போனால் நங்காதல ரிவ்விடத்தே வந்துநின்று நம்மைத்தேடுவர்
கொல்லோ வெனச் சிறைப்புறமாகப் பிரிவருமைகூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-
144. பரிவுசெய் தாண்டம்
பலத்துப்
பயில்வோன் பரங்குன்றின்வாய்
அருவிசெய் தாழ்புனத் தைவனங்
கொய்யவு மிவ்வனத்தே
பிரிவுசெய் தாலரி தேகொள்க
பேயொடு மென்னும்பெற்றி
இருவிசெய் தாளி னிருந்தின்று
காட்டு மிளங்கிளியே.
144
______________________________________________________________
13.29. மறைப்புறக்
கிளவியிற்
சிறைப்புறத் துரைத்தது.
இதன் பொருள்: பரிவு செய்து
ஆண்டு - எம்மைப் பரிந்தாண்டு; அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் - அம்பலத்தின்கட்
பயில்வானது பரங்குன்றினிடத்து; அருவி செய்தாழ் புனத்து ஐவனம் கொய்யவும்-அருவிநீராற் செய்யப்பட்ட
தாழ்ந்த புனத்தின்கணுண்டாகிய ஐவனத்தைக் கொய்யவும்; இவ் வனத்து இருவிசெய் தாளின் இருந்து -
இக் காட்டின்கண் இருவியாகச் செய்யப்பட்ட தாளிலேயிருந்து; செய்தால் பேயொடும் பிரிவு அரிது
- நட்புச்செய்தாற் பேயோடாயினும் பிரிவரிது; கொள்க என்னும் பெற்றி - இதனையுள்ளத்துக்
கொள்கவென்னுந் தன்மையை; இளங்கிளி இன்று காட்டும் - இளங்கிளிகள் இப்பொழுது காட்டாநின்றன
எ-று.
பேயோடாயினும்
பிரிவுசெய்தா லாற்றுதலரிதென் றுரைப் பினுமமையும். இருவியென்பது கதிர்கொய்த தட்டை. தாளென்பது
கதிர்கொய்யாதமுன்னுஞ் சொல்வதோர்பெயர். இப்புனத்துப் பயின்ற கிளிகள் தமக்குத்
துப்பாகாக்காலத்து மிதனைவிடாதிரா நின்றன; இனி நங்காதலர் நம்மாட்டென் செய்வ ரென்னுங்
கருத்தான்,
|