பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
312

13

பகற் குறி

13.30 மயிலொடு கூறி வரைவுகடாதல்

   
மயிலொடு கூறி வரைவுகடாதல் என்பது பிரிவருமைகூறி வரைவுகடாய தோழி, பிரிவாற்றாமையோடு தலைமகளையுங் கொண்டு புனங்காவலேறிப் போகாநின்றாள், கணியார்நினைவு இன்றுமுடிந்தது; யாங்கள் போகாநின்றோம்; இப்புனத்தொருவர் வந்தால் இங்கு நின்றும் போனவர்கள் துணியாதன துணிந்து போனாரென்று அவர்க்குச் சொல்லுமினென மயிலொடுகூறி வரைவுகடாவா நிற்றல். அதற்குச் செய்யுள்-

145. கணியார் கருத்தின்று முற்றிற்
        றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
    மணியார் பொழில்காண் மறத்திர்கண்
        டீர்மன்னு மம்பலத்தோன்

_____________________________________________________________

மறைப்புறமாயிற்று. சிறைப்பட வுரைத்த தென்பது பாடமாயின், சிறைக்கண்வந்து நிற்பவென்றுரைக்க.

144

13.30.  நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம்
      பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.


   
இதன் பொருள்: கணியார் கருத்து இன்று முற்றிற்று-கணியாரது நினைவு இன்று முடிந்தது; யாம் சென்றும் - யாங்கள் போகா நின்றேம்; கார்ப் புனமே-கரியபுனமே; மணி ஆர் பொழில்காள் - மணிகளார்ந்த பொழில்காள்; மறத்திர் கண்டீர்-வேங்கையொடு பயின்றீராகலின் நீரெம்மைமறப்பீர்; மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் கயிலை மயில்காள் - நிலைபெறு மம்பலத்தையுடையவனது அழகார்ந்த கயிலையினின்றும் வந்த மயில்காள்; அயில் வேல் ஒருவர் வந்தால்-அயில் வேல் துணையாகத் தனிவருமவர் ஈண்டுவந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின்-அன்புடையார் துணியாதனவற்றை அவர் துணிந்தாரென்னு நீர்மைகளையவர்க்குச் சொல்லுமின் எ-று.

    நீர்மை ஈண்டு வியப்பு. நீரிவ்வாறு சொன்னால் அவராற்று வாரென்பது கருத்து. பேரருளி னோன் கயிலையினுள்ளீராகலின் நீர் கண்ணோட்ட முடையீரென்பது கருத்து. கார்ப்புனமென்பதற்குக் கார் காலத்துப் பொலியும் புனமெனினுமமையும். துணியாதனவாவன பிரிதலும் வரையுந் துணையு மாற்றியிருத்தலும். புனமே பொழில்காள்