பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
314

பகற் குறி

    எதுநுமக் கெய்திய தென்னுற்
        றனிரறை யீண்டருவி
    மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
        வாமற்றிவ் வான்புனமே.

146

13.32 பதிநோக்கிவருந்தல்

   
பதிநோக்கி வருந்தல் என்பது வறும்புனத்திடை வருந்தா நின்ற தலைமகன், இவ்வாறணித்தாயினும் நம்மாற் செய்யலாவதொன்றில்லையென்று அவளிருந்த பதியைநோக்கித் தன்னெஞ்சோடுசாவி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

147. ஆனந்த மாக்கட லாடுசிற்
        றம்பல மன்னபொன்னின்
    தேனுந்து மாமலைச் சீறூ
        ரிதுசெய்ய லாவதில்லை

________________________________________________

மற்றென்பது அசைநிலை. எல்லாரையு மாளும் பொதுவாகிய முறைமையினின்று நீக்கி என்னை யுளநெகிழ்விப்பதோரு பாயத்தானாண்டவ னென் றுரைப்பினுமமையும். இன்பஞ்செய்வதுந் துன்பஞ்செய்வது மொன்றாகமாட்டா தென்னுங் கருத்தாற் புலியூரரன் பொருப்பேயிது வெனிலென்றான். அறையீண்டருவி காள் நீரென்னுற்றீரென்றும், அறையீண்டருவிப் புனமென்றும் உரைப்பாருமுளர்.

146

13.32.  மதிநுத லரிவை பதிபுக லரிதென
      மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது.


   
இதன் பொருள்: ஆனந்த மாக் கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன-ஆனந்தமாகிய நீரானிறைந்ததோர் பெரியகடல் நின்றாடுஞ் சிற்றம்பலத்தையொக்கும்; பொன்னின் தேன் உந்து மாமலைச் சீறூர் இது-பொன்னினது தேன்றத்திப் பாயும் பெரிய மலைக்கணுண்டாகிய சீறூரிது; செய்யலாவது இல்லை - இவ்வாறணித்தாயினு நம்மாற் செய்யலாவ தொன்றில்லை, அதனால் - வான் உந்தும் மாமதி வேண்டி அழும் மழப்போலும்-வானின் கட்செல்லும் பெரிய மதியைக் கொள்ள வேண்டி அதனருமையறியா தழுங்குழவிபோல எய்துதற் கரியாளை, விரும்பி; நல் நெஞ்சமே-நல்ல நெஞ்சமே; நீயுந்