பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
315

பகற் குறி

    வானுந்து மாமதி வேண்டி
        அழுமழப் போலுமன்னோ
    நானுந் தளர்ந்தனன் நீயுந்
        தளர்ந்தனை நன்னெஞ்சமே.

147

______________________________________________________________

தளர்ந்தனை-நீயுந் தளர்ந்தாய்; நானும் தளர்ந்தனன்-நீயவ்வரும் பொருள்விரும்புதலான் யானுந்தளர்ந்தேன் எ-று.

    தேனையுமிழுமாமலையெனினு மமையும். மழவை நெஞ்சத்திற்கேயன்றித் தலைமகற்குவமையாக வுரைப்பினு மமையும். நெஞ்சத்தைத் தன்னோடுபடுத்தற்கு நன்னெஞ்சமெனப் புனைந்து கூறினான். இது தலைமகளை இற்செறிவிக்கின்றகாலத்து ஆற்றானாகிய தலைமகன் றோழிகேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது. மன்னுமோவும்; அசைநிலை. பதி - தலைமகன். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

147

பகற்குறி முற்றிற்று.