பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
317

New Page 1

இரவுக் குறி

    வேற்றுக் குறிகூறல் கடலிடை வைத்துத்
    துயரறி வித்த றோழியு மின்றித்
    தானே கிடந்து தனிமையுற் றாற்றுங்
    காம மிக்க கழிபடர் கிளவி
    காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
    யாறுபார்த் துற்ற வச்சக் கிளவி
    தன்னுட் கையா றெய்திடு கிளவி
    நிலைகண் டுரைத்த னெடுங்கடற் சேர்த்த
    லலரறி வித்தலோ டாறைம் மூன்று
    மிரவுக் குறியிவை யென்றிசி னோரே.

14.1 இரவுக்குறிவேண்டல்

   
இரவுக்குறி வேண்டல் என்பது பதிநோக்கி வருந்தாநின்ற தலைமகன், இற்றையிரவிற்கியானுங்கள் சீறூர்க்கு விருந்து; என்னையேற்றுக் கொள்வாயாக வெனத் தோழியை யிரவுக்குறி வேண்டாநிற்றல். அதற்குச் செய்யுள்-

148. மருந்துநம் மல்லற் பிறவிப்
        பிணிக்கம் பலத்தமிர்தாய்
    இருந்தனர் குன்றினின் றேங்கும்
        அருவிசென் றேர்திகழப்

___________________________________________________________

14.1.  நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து
     வீங்கு மென்முலைப் பாங்கிக் குரைத்தது.


   
இதன் பொருள்: வெள்வளை - வெள்வளையை யுடையாய்; குன்றினின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ மேகம் பொருந்தின -குன்றின்கணின் றொலிக்கு மருவிகள்பாய்ந் தழகுவிளங்கும் வண்ணம் மேகம்வந்து பொருந்தின; அதனால், புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின் உங்கள் சீறூரதனுக்கு யான் விருந்தினன் - அம் மேகத்தின்கட் புதைந்திருள் செறியுஞ் செய்காட்டையுடைய நுமது சீறூரதற்கியான் விருந்தினன்; என்னை யேற்றுக் கொள்வாயாக எ-று.

   
நம் அல்லற் பிறவிப் பிணிக்கு மருந்து - நம்முடைய அல்லலைச் செய்யும் பிறவியாகிய பிணிக்கு அருந்து மருந்தாய் வைத்தும்; அம்பலத்து அமிர்தாய் இருந்தனர் குன்றின் - அம்பலத் தின்கட்