இசும
இரவுக் குறி
இசும்பினிற் சிந்தைக்கு மேறற்
கரிதெழி லம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான்
மலயத்தெம் வாழ்பதியே.
149
______________________________________________________________
அசும்பின்கட் சென்று பொருந்தி யேறுமிடத்து
இட்டிமையால் அளை நுழைந்தாற் போன்றிருக்கும்; எம் வாழ்பதி இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு.
அரிது-அதுவேயுமன்றி, எம் வாழ்பதி வழுக்கினான் மெய்யே சிந்தைக்கு மேறுதற்கரிது; அதனாலாண்டுவரத்தகாது
எ-று.
எழில் அம்பலத்துப் பசும் பனிக்கோடு
மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதி-எழிலையுடைய வம்பலத்தின்க ணுளனாகிய குளிர்ந்த பனியையுடைத்தாகிய
பிறையைச்சூடியவனது மலயத்தின் கணுண்டாகிய வெம்வாழ்பதியெனக்கூட்டுக.
இசும்பு ஏற்றிழிவு முதலாயின குற்ற
மென்பாருமுளர். அசும்பு - சிறு திவலை. இசும்பினிற் சிந்தைக்கு மேறற்கரி தென்றவதனான், எமது
வாழ்பதி யிவ்வொழுக்கத்தைச் சிறிதறியு மாயிற் சிந்தையாலு நினைத்தற்கரிய துயரத்தைத் தருமாதலால்,
தாஞ்செத்துலகாள்வாரில்லை; அதுபோல விவ்வொழுக்க மொழுகற் பாலீரல்லீரென்று மறுத்துக் கூறியவாறாயிற்று.
பசுமை - செவ்வியுமாம். அதனைக் கோட்டின் மேலேற்றுக. கோட்டையுடைமையாற் கோடெனப்பட்டது. மெய்ப்பாடு:
இளிவரல். பயன்: இரவுக்குறிமறுத்தல்.
149
|