பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
320

14

இரவுக் குறி

14.3 நின்றுநெஞ்சுடைதல்

   
நின்று நெஞ்சுடைதல் என்பது வழியருமை கூறக்கேட்ட தலைமகன், எய்துதற்கரியாளை விரும்பி நீ மெலியாநின்றவிதற்கு யானாற்றேனெனக் கூறித் தனதிறந்துபாடு தோன்றநின்று தன்னெஞ்சுடைந்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

150. மாற்றே னெனவந்த காலனை
        யோல மிடஅடர்த்த
    கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
        கொடுங்குன்றின் நீள்குடுமி
    மேற்றேன் விரும்பு முடவனைப்
        போல மெலியுநெஞ்சே
    ஆற்றே னரிய அரிவைக்கு
        நீவைத்த அன்பினுக்கே.

150

_____________________________________________________________

14.3.  பாங்கி விலங்கப் பருவரை நாடன்
     நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

   
இதன் பொருள்: மாற்றேன் என வந்த காலனை-ஒருவரானு மாற்றப்படேனென்று வழிபடுவோன துயிரைவௌவ வந்த காலனை; ஓலமிட அடர்த்த கோற்றேன்-அவனோலமிடும் வண்ணமடர்த்த கோற்றேன்; குளிர்தில்லைக் கூத்தன்-குளிர்ந்த தில்லைக் கணுளனாகிய கூத்தன்; கொடுங்குன்றின் நீள் குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப் போல-அவனுடைய கொடுங்குன்றினது நீண்ட குடுமியின்மேலுண்டாகிய தேனைவிரும்பு முடவனைப் போல; மெலியும் நெஞ்சே-எய்துதற் கருமையை நினையாது மெலிகின்ற நெஞ்சமே; அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கு ஆற்றேன்-அரியளாகிய வரிவையிடத்து நீயுண்டாக்கிய அன்பால் யானாற்றேன் எ-று.

   
மாற்றேனென்பது செயப்படுபொருட்கண் வந்தது. மாறேனென்பது விகாரவகையான் மாற்றேனென நின்றதெனினு மமையும். சுவைமிகுதி யுடைமையிற் கோற்றே னென்றார். நீ வன்கண்மையை யாதலின் இவ்வாறு மெலிந்து முயிர்வாழ்தி, யானத்தன்மை யேனல்லேன் இறந்துபடுவே னென்னுங் கருத்தான், மெலியுநெஞ்சே