14
இரவுக் குறி
14.4 இரவுக்குறிநேர்தல்
இரவுக்குறி நேர்தல் என்பது தலைமக
னெஞ்சுடைந்து வருந்தாநிற்பக் கண்டு, இவனிறந்துபடவுங் கூடுமென வுட்கொண்டு, நீ யாளிக ணிரைத்துநின்
றியானைகளைத்தேடு மிராவழியின் கண்வந்து மீள்வேனென்னாநின்றாய்; இதற்குத் தீவினையேன்
சொல்லுவதெவனோ வென்று மறுத்த வாய் பாட்டாற் றோழி யிரவுக்குறி நேராநிற்றல். அதற்குச் செய்யுள்-
151. கூளி நிரைக்கநின்
றம்பலத்
தாடி குரைகழற்கீழ்த்
தூளி நிரைத்த சுடர்முடி
யோயிவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தட லானைகள்
தேரு மிரவில்வந்து
மீளியுரைத்தி வினையே
னுரைப்பதென் மெல்லியற்கே.
151
______________________________________________________________
யானாற்றேனென்றான்.
நீங்கி விலங்காது - நீங்கியுள்ளஞ் செல்கின்ற செலவினின்றும் விலங்காது. மெய்ப்பாடு: இளிவரல்.
பயன்: இரவுக்குறி நயப்பித்தல்.
150
14.4. தடவரை நாடன் தளர்வு
தீர
மடநடைப் பாங்கி வகுத்து ரைத்தது.
இதன் பொருள்:
கூளி நிரைக்க நின்று - கூத்தின்கட் சுவையாற் பேய்களும் போகாது நிரைத்துநிற்ப நின்று; அம்பலத்து
ஆடி குரை கழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர் முடியோய் - அம்பலத்தி்ன் கணாடுவானது ஒலிக்குங்
கழலையுடைய திருவடிக்கணுண்டாகிய தூளிமொய்த்த சுடர்முடியையுடையோய்; இவள் தோள்நசையால் - இவடோண்மேலுண்டாகிய
விருப்பினால்; ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து மீளி உரைத்தி - ஆளிகள்
ஊடுபோக்கற நிரைத்து வலியையுடைய யானைகளைத் தேடு மிரவின்கண்வந்து மீளுதலைச் சொல்லாநின்றாய்;
மெல்லியற்கு வினையேன் உரைப்பது என் - இனி மெல்லியற்குத் தீவினையேன் சொல்லுவதென்? உடன்படுவாயென்பேனோ
மறுப்பாயென்பேனோ? எ-று.
|