New Page 1
இரவுக் குறி
தெம்மலர் சூடிநின் றெச்சாந்
தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி
வாய்நும ராடுவதே.
153
14.7 குறியிடங்கூறல்
குறியிடங்கூறல் என்பது உட்கொண்டு
வினாவிய தலைமகனுக்கு, யாங்கள் சந்தனச்சாந்தணிந்து, சுனைக்காவிகள் சூடி, தோகைக டுயில்செய்யும்
வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம்; அவ்விடத்து நின்வரவறிய மயிலெழுப்புவாயாகவெனத் தோழி
குறியிடங்கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
154. பனைவளர் கைம்மாப்
படாத்தம்
பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற்பொதியின்
மலைப்பொலி சந்தணிந்து
____________________________________________________________
தாமரைமலர்க
ளாயிரத்தைத் தூவி முன்வழிபட்டு ஒருஞான்று அவற்றுளொன்று குறைதலாற் கரியமால் அவற்றோடொக்குந்
தனது திருக்கண்ணை யிடந்தணியும்; மொய்ம் மலர் ஈர்ங் கழல் அம்பலத்தோன் மன்னுதென் மலயத்து-பெரிய
மலர்போலும் நெய்த்த நிறத்தையுடையவாகிய திருவடியையுடைய வம்பலத்தான்றங்குந் தென்மலயத்திடத்து;
எல்லியவாய் நுமர் ஆடுவது-இராப்பொழுதின்கண் நுமர் விளையாடுவது; எம்மலர் சூடி நின்று-எம்மலரைச்
சூடிநின்று; எச்சாந்து அணிந்து-எச்சாந்தையணிந்து; என்ன நல் நிழல்வாய்-என்ன நன்னிழற்கீழ்?
கூறுவாயாக எ-று.
வாள்: உவமையெனினுமமையும். நுமரென்றது
அவரோடொரு நிலத்தாராகிய மக்களை. திருமாலென்பதூஉம் பாடம். நிழல் அணியன் றெனினும். பன்மைபற்றி
யணியென்றார். மெய்ப்பாடு: அது. பயன்: குறியிடமுணர்த்துதல்.
153
_____________________________________________________________
14.7. இரவுக் குறியிவ ணென்று
பாங்கி
அரவக் கழலவற் கறிய வுரைத்தது.
இதன் பொருள்:
பனை வளர் கைம் மாப் படாத்து அம்பலத்து அரன்பாதம்-பனைபோலுநெடிய கையையுடைய மாவினுரியாகிய
|