பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
325

சு

இரவுக் குறி

    சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
        தோகை துயில்பயிலுஞ்
    சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
        றாடுஞ் செழும்பொழிலே.

154

14.8 இரவுக்குறியேற்பித்தல்

   
இரவுக்குறி யேற்பித்தல் என்பது தலைமகனுக்குக் குறியிடங் கூறித் தலைமகளுழைச் சென்று, அந்திக்காலத் தோரலவன் றன்பெடையோடு பயிலக்கண்டு ஒருபெரியோன் வருத்தமிக்குச் சென்றான்; அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந்திலேனெனத் தோழி அவனதாற்றாமைகூறித் தலைமகளை யிரவுக்குறி யேற்பியாநிற்றல். அதற்குச் செய்யுள்-

155. மலவன் குரம்பையை மாற்றியம்
        மால்முதல் வானர்க்கப்பாற்
    செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
        கானலிற் சீர்ப்பெடையோ

______________________________________________________________

படாத்தையுடைய வம்பலத்தரன்பாதங்களை; விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின்மலை - விண்ணோர் பரவுதற்கிடமாகிய வளருஞ் சாரலையுடைய பொதியின்மலைக்கண்; பொலி சந்து அணிந்து-பொலியுஞ் சந்தனச் சாந்தையணிந்து; சுனைவளர் காவிகள் சூடி-சுனைக்கண் வளருங் காவிகளைச் சூடி; யாங்கள் நின்று ஆடும் செழும்பொழில்-யாங்கணின்றாடும் வளவியபொழில்; பைந்தோகை துயில் பயிலும் சினை வளர் வேங்கைகள்-பசிய மயில்கள் துயில்செய்யுங் கோடுவளரும் வேங்கைப் பொழில் எ-று.

    என்றது சந்தனச் சாந்தணிந்து சுனைக்காவிசூடி வேங்கைப் பொழிற்கண் நீவந்துநின்று நின்வரவறிய மயிலெழுப்பு வாயாகவென்றவாறு; மெய்ப்பாடு: அது. பயன்: இரவுக்குறியிட முணர்த்துதல்.

154

14.8.  அரவக்கழலவ னாற்றானென
      இரவுக்குறி யேற்பித்தது.


   
இதன் பொருள்: மல வன் குரம்பையை மாற்றி-மலங்களையுடைய வலிய யாக்கையாகிய குரம்பையைமாற்றி; மால் முதல்