பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
326

டலவன

இரவுக் குறி

டலவன் பயில்வது கண்டஞர்
        கூர்ந்தயில் வேலுரவோன்
    செலவந்தி வாய்க்கண் டனனென்ன
        தாங்கொன்மன் சேர்துயிலே.

155

_______________________________________________________________

அவ்வானவர்க்கு அப்பால் செலவு அன்பர்க்கு ஓக்கும்-மான் முதலாகிய அவ்வானவர்க்கப்பாற் செல்லுஞ் செலவை அன்பராயினார்க் கென்றோக்கிவைக்கும்; சிவன் தில்லைக் கானலில்-சிவனது தில்லையைச் சூழ்ந்த கானலிடத்து; சீர்ப்பெடையோடு அலவன் பயில்வது கண்டு-நல்லபெடையோடலவன்பயின்று விளையாடுவதனைக்கண்டு; அஞர் கூர்ந்து-வருத்தமிக்கு; அயில் வேல் உரவோன்-அயில்வேலையுடைய வுரவோன்; அந்திவாய்ச் செலக்கண்டனன்-அந்திப் பொழுதின்கட்செல்ல அவனைக் கண்டேன்; மன்சேர் துயில் என்னதாங் கொல்-பின் அம்மன்னனது சேர்துயிலெத்தன்மைத்தாம்! அறியேன் எ-று.

   
அப்பாற்செலவு மான் முதலாயினார்க்கு மேலாகிய பதங்கள். அன்பருட் போகவேட்கை யுடையார் அவற்றைப் பெற்றுப் போகந்துய்ப்பாராதலிற் செலவன் பர்க் கோக்கு மென்றார். பெடையொடும்பயிலு மலவனைக்கண்டு முயிர்தாங்கிச் சென்றானாதலின் உரவோ னென்றாள்.

155