14
இரவுக் குறி
14.9 இரவரவுரைத்தல்
இரவரவுரைத்தல் என்பது அலவன்மேல்வைத்
திரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு அதுவழியாகநின்று, வேட்கைமிகவால் யானைகணடுங்கச் சிங்கந்திரியுமலைச்சரியிடத்து
வரவேண்டிச் சொல்லாநின்றான்; இதற்கியாஞ் செய்வதென்னோவெனத் தோழி தலைமகளுக்குத் தலைமகனிரவரவு
கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
156. மோட்டங் கதிர்முலைப்
பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி
வெற்பன் மழைகுழுமி
_______________________________________________________________
14.9. குரவரு குழலிக்
கிரவர வுரைத்தது.
இதன் பொருள்: மெல்லியல்-மெல்லியலாய்;
மோட்டு அம்கதிர்முலைப் பங்கு உடைத்தில்லை முன்னோன் கழற்கே-பெரிய வழகிய கதிர் முலையையுடைய
தோர் கூற்றையுடைய தில்லைக் கணுளனாகிய எல்லாப்பொருட்கு முன்னாயவனுடையதிருவடி யொன்றற்குமே;
கோட்டம் தரும் குருமுடி நம் வெற்பன்-வணங்குதலைச் செய்யுங் குருமுடியையுடைய நம்வெற்பன்; மழை
குழுமி நாட்டம் புதைத்தன்ன நள் இருள்-முகில்கள் திரளுதலான் நாட்டத்தைப் புதைத்தாற்
போன்றிருக்குஞ் செறிந்த விருட்கண்; நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரி சரிவாய்-யானைகணடுங்கச்
சிங்கம் வேட்டந்திரியு மலைச்சரியிடத்து; வருவான் சொல்லும்-வரவேண்டிச் சொல்லாநின்றான்;
இனியென்செயத்தகும்? எ-று.
குரு-நிறம். முன்னோன்
கழற்கல்லது பிறிதோரிடத்துந் தாழ்ந்து நில்லாப் பெரியோன் தாழ்ந்து வேண்டுவதனை மறுத்தலரிதென்பது
போதர, முன்னோன்கழற்கே கோட்டந்தரு நங்குரு முடிவெற்ப னென்றாள். ஆற்றின்கண் வருமேத மறியினும்
அவனது வேட்கை மிகுதியா லென்னாலொன்றுங் கூறுவ தரிதாயிற்றென்பது போதர, நள்ளிரு ணாகநடுங்கச்
சிங்கம்வேட்டந்திரி சரிவாயென்றாள். குரவெனவும் இரவெனவும் விகாரவகையாற் குறுகிநின்றது.
இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த விளிவரல். பயன்: தலைமகளை யிரவுக்குறி நேர்வித்தல்.
156
|