பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
328

இரவுக் குறி

    நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள்
        நாகம் நடுங்கச்சிங்கம்
    வேட்டந் திரிசரி வாய்வரு
        வான்சொல்லு மெல்லியலே.

156

14.10 ஏதங்கூறிமறுத்தல்

   
ஏதங்கூறி மறுத்தல் என்பது தலைமகனிரவரவுகேட்ட தலைமகள் தனக்கவன் செய்த தலையளியுமுதவியு நினையாநின்ற வுள்ளத்தளாய், அரிதிரண்டு நின்றியானைவேட்டஞ் செய்யும் வல்லிருட்கண் வள்ளலை வாவென்று சொல்லத்தகு மோவென ஏதங்கூறி மறுத்துரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

157. செழுங்கார் முழவதிர் சிற்றம்
        பலத்துப் பெருந்திருமால்
    கொழுங்கான் மலரிடக் கூத்தயர்
        வோன்கழ லேத்தலர்போல்

___________________________________________________________

14.10.  இழுக்கம்பெரி திரவரினென
      அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.


   
இதன் பொருள்: செழுங்கார் முழவு அதிர் சிற்றம்பலத்து-வளவிய கார்போலக் குடமுழா முழங்குஞ் சிற்றம்பலத்தின் கண்ணே; பெருந்திருமால் கான் கொழு மலர் இட - பெரிய திருமால் நறுநாற்றத்தையுடைய கொழுவிய மலரையிட்டுப் பரவ; கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர்போல்-கூத்தை விரும்பிச் செய்வானுடைய கழல்களை யேத்தாதாரைப்போல வருந்த; முழங்கு ஆர் அரி முரண் வாரணவேட்டை செய் மொய் இருள்வாய்-முழங்கா நின்ற கிட்டுதற்கரிதாகிய சீயம் முரணையுடைய வாரணவேட்டையைச் செய்யும் வல்லிருட்கண்; வழங்கா அதரின் வழங்கும் எம் வள்ளலை இன்று என்றுமோ-யாவரும் வழங்காத வழியிடத்து வழங்குவாயாக வென்று எம்முடைய வள்ளலை யின்று சொல்லுதுமோ! இவ்வாறு சொல்லுதற்குமோ!  எ-று.
   
   
ஏத்தலரை யானைக்குவமையாக வுரைக்க. ஏத்தலர்போல் வழங்கென்றுமோவென்று கூட்டியுரைப்பாருமுளர். முழங்காரரி யென்பதற்கு முழங்குதலார்ந்த வரியென் பாருமுளர். தனக்கவன்