பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
329

New Page 1

இரவுக் குறி

    முழங்கா ரரிமுரண் வாரண
        வேட்டைசெய் மொய்யிருள்வாய்
    வழங்கா அதரின் வழங்கென்று
        மோவின்றெம் வள்ளலையே.

157

14.11 குறைநேர்தல்

   
குறைநேர்தல் என்பது ஏதங்கூறி மறுத்த தலைமகள், அவனாற்றானாகிய நிலைமைகேட்டு, யான் புனலிடைவீழ்ந்து கெடப்புக என்னுயிர் தந்த பெரியோர்க்குச் சிறியேன் சொல்லுவதறியேனென உடம்பட்டு நேராநிற்றல். அதற்குச் செய்யுள்-

158. ஓங்கு மொருவிட முண்டம்
        பலத்தும்ப ருய்யவன்று
    தாங்குமொருவன் தடவரை
        வாய்த்தழங் கும்மருவி

_______________________________________________________________

செய்த தலையளியுமுதவியு நினையாநின்ற வுள்ளத்தளாகலின், வள்ளலென்றாள். மைந்தனையென்பது பாடமாயின், ஆண்மைத் தன்மை தோன்ற நின்றதாகவுரைப்பாருமுளர். ஆற்றினேதமுணர்ந்து மறுத்தாள் அவருழை யாஞ்சேற லொழிந்து அவரை வரச்சொல்லக் கடவேமோ வென்றவாறு. அலங்காரம்: எதிர்காலக் கூற்றிடத்துக் காரியத்தின்கண்வந்த இரங்கல்விலக்கு, உபாயவிலக்கு, மெய்ப்பாடு: அச்சம். பயன்: இரவுக்குறி மறுத்தல்.

157

14.11.  அலைவே லண்ணல் நிலைமை கேட்டுக்
      கொலைவேற் கண்ணி குறைந யந்தது.


   
இதன் பொருள்: ஓங்கும் ஒரு விடம் உண்டு - உலகமுழுதையுஞ் சுடும் வண்ணம் மேன்மேலும் வளராநின்றதோர் விடத்தைத் தானுண்டு; உம்பர் உய்ய அன்று தாங்கும் அம்பலத்து ஒருவன் தடவரைவாய் - உம்பரெல்லா முய்ய அன்று தாங்குமம்பலத்தொருவனது பெரியவரையிடத்து; தழங்கும் அருவி வீங்கும் சுனைப்புனல் - ஒலியாநின்ற வருவியாற் பெருகுகின்ற சுனைப்புனற் கண்; அன்று வீழ்ந்து அழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கு - அன்றியான் விழுந்து கெடப்புகப் பற்றியெடுத்துக் கரைக்கணுய்த்த பெரியோருக்கு; சிறியேன் சொல்லும் வாசகம் அறியேன் - சிறியேனாகியயான் சொல்லுவதோர் மாற்றமறியேன் எ-று.