பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
330

இரவுக் குறி

    வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
        றழுங்கப் பிடித்தெடுத்து
    வாங்கு மவர்க்கறி யேன்சிறி
        யேன்சொல்லும் வாசகமே.

158

_____________________________________________________________

    ஒருநஞ்சென்பதற்கு ஒப்பில்லாத நஞ்செனினுமமையும். தடவரைவாய் வீழ்ந்தழுங்கவென வியையும், சுனையென்றியைப் பினுமமையும். சுனைப்புனல்வாய் வீழ்ந்தழுங்க வன்று தாமே வந்தெடுத்துய்வித்தாற்போல வழங்காதவதரிற் றாம்வருதலான் எனக்கு வருமிடுக்கணையுந் தாமே நீக்கினல்லது யானறிவதொன்றில்லை யென்னுங்கருத்தால், சுனைப்புனல் வீழ்ந்தன்றழுங்கப் பிடித்தெடுத்து வாங்குமவர்க்கென்றாள்; ஆற்றின்கணேத நினைந்திரவுக்குறி மறுத்த தலைமகள் அவன்செய்த வுதவிநினைந்து பின்னுடம்பட்டாளாதல் பொருந்தா மையறிந்து கொள்க. இக்கருத்தே பற்றி யுதவிநினைந்து குறைநயந்ததென்னாது அவனதாற்றாமை நிலைமை கேட்டுக் குறைநயந்த தென்றார். அவன் செய்த பேருதவி சொல்லுகையால் அவன்செய்த வுதவிக்குக் கைம்மாறாவது நானவனுழைச்சேறலே யென்றுடம்பாடாயிற்று. பிறவிக் குட்டத்தியான் விழுந்து கெடப்புகத் தாமேவந்து பிடித்தெடுத்து அதனினின்றும் வாங்கிய பேருதவியார்க்குச் சிறியேனாகிய யான் சொல்வதறியே னென்று வேறுமொரு பொருடோன்றியவாறு கண்டு கொள்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: இரவுக்குறிநேர்தல்.

158