New Page 1
இரவுக்
குறி
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச்
சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன
நீண்முத்த மாலைகளே.
170
14.24 நிலவு வெளிப்பட வருந்தல்
நிலவு வெளிப்பட வருந்தல் என்பது
இரக்கங்கூறி வரைவு கடாயதோழி, பிற்றைஞான்று அவனிரவுக்குறியிடைவந்து நிற்ப, நிலவு வெளிப்பட்டாற்
சென்றெதிர்ப்படமாட்டாமற் றாங்கள் வருந்தாநின்றமை சிறைப்புறமாக மதியொடு புலந்து கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
171. நாகந் தொழவெழில் அம்பலம்
நண்ணி நடம்நவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்கள்
______________________________________________________________
14.24. தனிவே லவற்குத் தந்தளர்
வறியப்
பனிமதி விளக்கம் பாங்கி
பகர்ந்தது.
இதன் பொருள்: நவில் வேற்கை
எங்கள் நாகம் வர-பயிலப்பட்ட வேலையேந்திய கையையுடைய எங்கள் யானை வர; நாம் எதிர் கொள்ளும்
நள் இருள்வாய்-நாங்களெதிர்கொள்ளுஞ் செறிந்த விருளிடத்து; நற ஆர் நாகம் மலி பொழில்வாய்
எழில் வாய்த்த நின் நாயகம் - அவ்விருளச் சிதைத்துத் தேனார்ந்த நாகமலர் மலிந்த பொழிலிடத்துநின்று
நீசெய்கின்ற அழகுவாய்த்த நினது முதன்மை; மதியே - திங்காள்; மதியே - நினக்கறிவே; நாகம்
தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் நாகம் இது -பதஞ்சலியாகிய நாகந்தொழ எழிலையுடைய
வம்பலத்தை நண்ணிக் கூத்தைப் பயில்வானது மலைகாணிஃது; இதனைக் கடைப் பிடிப்பாயாக எ-று.
நாகத்தான் விழுங்கப்படுநீ
நாகந்தொழ வம்பலத்து நடம் பயில்வோனது மலைக்கட்புகுந்து விளங்கி வீற்றிருத்தல் நினக்கு நன்றி
பயவாதென்பது கருத்து. அறிவென்பது ஈண்டறிந்து செய்யப்படும் காரியத்தை. தனிநாயகமென்பதூஉம் பாடம்.
மெய்ப்பாடு: வெகுளி. பயன்: இடையீடறிவித்தல்.
171
|