ந
இரவுக்
குறி
நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் நாயகமே.
171
14.25 அல்லகுறியறிவித்தல்
அல்லகுறி யறிவித்தல் என்பது குறியல்லாதகுறி
யெதிர்ப் பட்டு மீண்டமை, பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறம் வந்து நிற்ப, தோழி தலைமகளுக்குக்
கூறுவாள்போன்று, அன்னத்தின் மேல்வைத்து அறிவியாநிற்றல். அதற்குச் செய்யுள்-
172. மின்னங் கலருஞ் சடைமுடி
யோன்வியன் தில்லையன்னாய்
என்னங் கலமர லெய்திய
தோவெழின் முத்தந்தொத்திப்
____________________________________________________________
14.25. வல்லி யன்னவ ளல்ல
குறிப்பாடு
அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத்
துரைத்தது.
இதன் பொருள்: மின் அங்கு
அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய்-ஒளி யவ்விடத்துவிரியுஞ் சடையா னியன்ற முடியையுடையவனது
அகன்ற தில்லையை யொப்பாய்; எழில் முத்தம் தொத்தி-எழிலையுடைய அரும்பாகிய முத்தந்தொத்தி;
அங்கு பொன் அலர் புன்னைச் சேக்கையின்வாய்-அவ்விடத்துத் தாதாகிய பொன்மலரும் புன்னைக்கணுண்டாகிய
தஞ்சேக்கை யிடத்து; அன்னம் முற்றும் புலம்புற்றுப் புலரும் அளவும் துயிலாது அழுங்கின- அன்னமெல்லாம்
துன்புற்றுப் புலருமளவுந் துயிலாது ஆரவாரித்தன; அங்கு எய்தியது அலமரல் என்-அவ்விடத் தெய்திய தாகிய
அலமரலென்னாம்? அறிகின்றிலேன் எ-று.
மின்னங் கலரு மென்பதற்கு
மின்னவ்விடத் தலர்ந்தாற் போலுஞ் சடையெனினு மமையும். என்னங்கலமரலெய்தியதோ வென்பதற்கு
என்ன வலமர லாண்டெய்திற்றோ வென்று கூட்டியுரைப்பினுமமையும். இப் பொருட்கு என்னவென்பது கடைக்குறைந்து
நின்றது. முத்தந் தொத்துதலும் பொன்மலர்தலுமாகிய உறுப்பின்றொழில் முதன் மேலேறி நின்றன. சேக்கையின
|