New Page 1
இரவுக்
குறி
பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரு மளவுந்
துயிலா தழுங்கினவே.
172
14.26 கடலிடை வைத்துத் துயரறிவித்தல்
கடலிடை வைத்துத் துயரறிவித்தல்
என்பது தலைமகளிரவுறுதுயரம், தலைமகன் சிறைப்புறமாக, இவள்வாட நீ யிரையாநின்றாய்; இது நினக்கு
நன்றோவெனத் தோழி கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
173. சோத்துன் னடியமென்
றோரைக்
குழுமித்தொல் வானவர்சூழ்ந்
தேத்தும் படிநிற்ப வன்தில்லை
யன்னா ளிவள்துவள
____________________________________________________________
வாயழுங்கினவெனவியையும். நெடும்பொழுது
துயின்றில வென்பாள் புலருமளவுமென்றாள். பிற்றைஞான்று பகற்குறிவந்து நிற்பக் கூறினாளெனினுமமையும்.
அழுங்கல் - இரக்க மெனினுமமையும். அறைப்புனல்-அறைதலை யுடைய புனல். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அல்ல
குறிப்பட்டமை தலைமகற் குணர்த்துதல். இனித்திணைநெய்தல்.
172
14.26. எறிகடல் மேல்வைத் திரவரு
துயரம்
அறைக ழலவற் கறிய வுரைத்தது.
இதன் பொருள்: பெருங்கடலே
- பெருங்கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து - முற்காலத்து மிவ்வா றொலித்து
உன்னமிர்தத்தையுந் திருவையுந் திங்களையுமிழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் இவள் துவள
இரைப்பு ஒழியாய் - பெயர்த்து மொருபயனின்றியே இவள்வாட இரையாநின்றாய்; பழி நோக்காய் -
காரணமின்றிப் பிறரை வருத்துதலான் வரும்பழியையு நோக்குகின்றிலை; நினக்கிதுநன்றோ? எ-று.
சோத்து உன் அடியம் என்றோரை
- சோத்தம் உன்னடியமென்- றொருகாற் சொன்னாரை; தொல் வானவர் குழுமிச் சூழ்ந்து ஏத்தும்படி நிற்பவன்
தில்லை அன்னாள் இவள் - பழையராகிய வானவர் குழுமிப்
|