பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
349

 இரவுக் குறி

    ஏதுற் றழிதியென் னீர்மன்னு
        மீ்ர்ந்துறை வர்க்கிவளோ
    தீதுற்ற தென்னுக்கென் னீரிது
        வோநன்மை செப்புமினே.

174 

____________________________________________________________

கழிகாள் - அப்பொழிலைச் சூழ்ந்த கழிகாள்; எழிற் புள்ளினங்காள்-அக்கழிகளிற்பயிலு மெழிலையுடைய புள்ளினங்காள்; ஏது உற்று அழிதி என்னீர் - என்னை நீங்கள் யாதனை யுற்றழிகின்றா யென்று ஒருகாற் கூறுகின்றிலீர்; ஈர்ந்துறைவர்க்கு இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர்-குளிர்ந்த துறைவர்க்கு இவள் தீதுற்ற தெற்றிற்கென்று கூறுகின்றிலீர்; இதுவோ நன்மை - இதுவோ நம்மாட்டு நுங்கா தன்மை; செப்புமின்-சொல்லுமின் எ-று.

    மாதுற்ற மேனியென்பது ஆகுபெயராய் மேனியையுடையான்மே னின்றதெனினுமமையும். வரையுற்றவில்லியென்பதற்கு வரைத் தன்மையைப் பொருந்திய வில்லையுடையானெனினுமமையும். வரைத்தன்மையைப் பொருந்துதல் வரையாயிருத்தல். போது-பேரரும்பு. மன்னு மென்பதூஉம் இவளோ வென்னு மோகாரமும் அசைநிலை. மன்னுந்தீதுற்றதெனக் கூட்டிமிகுதிக்கண் வந்ததென்பாரு முளர். இதுவோ நன்மையென்பதற்குத் தில்லைச் சூழ்ந்தவிடத் துள்ளீராகலின் உமக்குண்டாகிய சிறப்புடைமை யிதுவோ வெனினு மமையும். அழுதியென்பதூஉம் பாடம். ஏழையது கிளவியென வியையும்.

174