பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
351

New Page 1

 இரவுக் குறி

துன்னற வுய்க்குமி்ல் லோருந்
        துயிலில் துறைவர்மிக்க
    கொன்னிற வேலொடு வந்திடின்
        ஞாளி குரைதருமே.

175

14.29 ஆறுபார்த்துற்ற வச்சக் கிளவி

   
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி என்பது சிறைப்புறமாகத் தலைமகள் ஆற்றாமை கூறக்கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நீ கான்யாறுபலவு நீந்திக் கைவேல் துணையாக அஞ்சாது வந்தால், யாங்களிச் சோலையிடத் துண்டாகிய தெய்வத்துக்கஞ்சுவேம்; அதனாலிவ் விருளிடை வரற்பாலையல்லை யெனத் தங்களச் சங்கூறி வரவுவிலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

176. தாருறு கொன்றையன் தில்லைச்
        சடைமுடி யோன்கயிலை
    நீருறு கான்யா றளவில
        நீந்திவந் தால்நினது

_______________________________________________________________

14.29.  நாறு வார்குழ னவ்வி நோக்கி
      ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.


   
இதன் பொருள்: தார் உறு கொன்றையன்-தாராகிய மிக்க கொன்றையை யுடையவன்; தில்லைச் சடைமுடியோன்-தில்லைக்கணுளனாகிய சடையானியன்ற முடியையுடையவன்; கயிலை நீர் உறுகான் யாறு அளவில நீந்தி வந்தால்-அவனது கயிலையின் நீரான் மிக்க கான்யாறுக ளெண்ணிறந்தனவற்றை நீந்தி வந்தால்; வயப்பொங்கு உரும் நினது போர் உறு வேல் அஞ்சுக-அவ்விடத்து வலியையுடைய பொங்குமிடியேறு நினது போர்மிக்க வேலையஞ்சி நின்பால் வாராதொழிக; மஞ்சு இவரும் சூர் உறு சோலையின் வாய் தூங்கு இருள் வரற்பாற்று அன்று-ஆயினும் மஞ்சுபரக்குந் தெய்வம்பொருந்துஞ் சோலையிடத்துச் செறிந்த விருட்கண் வரும்பான்மைத்தன்று; அத்தெய்வங்களை யாமஞ்சுதும் எ-று.

   
தாருறை கொன்றைய னென்பது பாடமாயின், தார்தங்கு கொன்றையனென முதலாகிய தன்பொருட்கேற்ற வடையடுத்து நின்றதாக