மற
மற்றுன்று மாமல ரிட்டுன்னை
வாழ்த்திவந் தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே.
178
14.32 இரவுறு துயரங் கடலொடு
சேர்த்தல்
இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல்
என்பது தலைமகனை யெதிர்ப்படமாட்டாது வருந்தாநின்ற தலைமகள், இற்றையிர வெல்லாம் என்னைப்போல
நீயுந் துன்பமுற்றுக் கலங்கித் தெளிகின்றிலை; இவ்விடத்து நின்னையுமகன்று சென்றாருளரோ வெனத்
தானுறுதுயரங் கடலொடு சேர்த்திக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்.
179. பூங்கணை வேளைப்
பொடியாய்
விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு
விழுந்தெழுந் தோலமிட்டுத்
______________________________________________________________
நின்றால்-நீ இல்வரைப்பிற்
புகுந்து நின்றால்; மல் துன்று மாமலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி-கண்டவர்கள்
இந்நிலத்திற் குரியனாகிய முருகனென்றுகருதி வளத்தையுடைய நெருங்கிய பெரிய மலர்களையிட்டு வாழ்த்தி
நின்னை வணங்காதே; மற்று ஒன்று சிந்திப்பரேல்-பிறிதொன்றை நினைவராயின்; மங்கை வாழ் வகை
வல்லளோ-மங்கை யுயிர்வாழும் வகை வல்லளோ? அதனாலிவ்வா றொழுகற்பாலையல்லை எ-று.
பரங்குன்றினின்ற புதல்வனென வியையும்.
மல்லல் கடைக் குறைந்து நின்றது. மற்றொன்று சிந்தித்தல் இவள் காரணமாக வந்தானென்று கருதுதல்.
முருகனென்றலே பெரும் பான்மையாகலின், உண்மையுணர்தலை மற்றொன்றென்றாள். ஏதஞ் செய்யக் கருதுத
லென்பாருமுளர். மெய்ப்பாடு: அச்சம். பயன்: வரைவு கடாதல்.
178
14.32. எறிவேற் கண்ணி
யிரவரு துயரஞ்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.
இதன்
பொருள்: பூங்
கணை வேளை-பூவாகிய கணையை யுடைய வேளை; பொடியாய் விழித்தோன் புலியூர் செறிகடலே-பொடியாய்
விழும் வண்ணம் விழ விழித்தவனது புலியூர் வரைப்பிற்
|