பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
355

 இரவுக் குறி

    தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
        கலங்கிச் செறிகடலே
    ஆங்கணைந் தார்நின்னை யும்முள
        ரோசென் றகன்றவரே.

179

14.33 அலரறிவுறுத்தல்

   
அலரறிவுறுத்தல் என்பது தலைமகளிரவுறுதுயரங் கடலொடு சேர்த்தி வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன், குறியிடைச் சென்று நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, நின்னருளாய் நின்றவிது எங்களுக் கலராகாநின்றது; இனி நீயிவ்வாறொழுகா தொழியவேண்டுமென அலரறிவுறுத்தி வரவுவிலக்கா நிற்றல். அதற்குச் செய்யுள்-

180. அலரா யிரந்தந்து வந்தித்து
        மாலா யிரங்கரத்தால்
    அலரார் கழல்வழி பாடுசெய்
        தாற்கள வில்லொளிகள்

__________________________________________________________

செறிந்த கடலே; ஓங்கு அணை மேவிப் புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு - நீ யோங்கி யணைந்த கரையைப் பொருந்திப் புரண்டு விழுந்தெழுந்து கூப்பிட்டு; தீங்கு அணைந்து ஓர் அல்லும் கலங்கித் தேறாய் - துன்பமுற்று ஓரிரவுங்கலங்கித் தெளிகின்றிலை. அதனால், அணைந்தார் நின்னையும் சென்று அகன்றவர் ஆங்கு உளரோ - அணைந்தவர் நின்னையுமகன்று சென்றார் அவ்விடத் துளரோ? உரைப்பாயாக எ-று.

    பொடியாய்விழ விழித்தோனென்னுஞ் சொற்கள் ஒரு சொன்நீரவாய்ப் பொடியாக்கினானென்னும் பொருளவாய், வேளை யென்னுமிரண்டாவதற்கு முடிபாயின. புலியூர்க் கடலே கலங்கித் தேறாயென்று கூட்டினுமமையும். செறிகட லென்புழிச் செறிவு எல்லை கடவாநிலைமை. பிரிவாற் றாதார்க்கு அணைமேவுதல் பஞ்சியணை மேவுதல். அணைந்தா ரென்பதூஉம் சென்றகன்றவ ரென்பதூஉம் அடுக்காய் உளரோவென்னும் பயனிலை கொண்டன. ஆங்கு: அசை நிலையுமாம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: அயர்வுயிர்த்தல்.

179

14.33.  அலைவேலண்ணன் மனமகிழருள்
       பலராலறியப் பட்டதென்றது.


   
இதன் பொருள்: மால் அலர் ஆயிரம் தந்து வந்தித்து-மால்