அலர
இரவுக்
குறி
அலரா விருக்கும் படைகொடுத்
தோன்தில்லை
யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே.
180
_____________________________________________________________
தாமரை
மலராயிரத்தைக் கொண்டு சென்றிட்டு வணங்கி; ஆயிரம் கரத்தால் அலர் ஆர் கழல் வழிபாடு செய்தாற்கு-தன்னாயிரங்
கையானு மலர்போலுங் கழலை வழிபடுதலைச் செய்தவற்கு; அளவில் ஒளிகள் அலராவிருக்கும் படை கொடுத்தோன்-அளவில்லாத
வொளிகள் விரியாநிற்கும் ஆழியாகிய படையைக் கொடுத்தவன்; தில்லையான்-தில்லைக்கண்ணான்;
அருள் போன்று-அவனதருள் போல; ஐய - ஐயனே; மெய் அருள்-நின்னுடைய மெய்யாகிய வருள்; அம்பல் கைம்மிக்கு
அலராய் விளைகின்றது-அம்பல்கைம் மிக்கலராய் விளையாநின்றது; இனித்தக்கது செய்வாயாக எ-று.
அலராவிருக்கு மென்பது ஓர் நிகழ்காலச்
சொல். தில்லையானருள் பெற்றார் உலகியல்பினராய் நில்லாமையின், அவ்வருளுலகத்தார்க் கலராமென்பது
கருத்து.
“நாடவர் நந்தம்மை யார்ப்ப
வார்ப்ப”
(தி.8 திருப்பொற்சுண்ணம் பா.
7) என்பதூஉ மக்கருத்தேபற்றி வந்தது. அம்பல்-பரவாத களவு; என்னை?” அம்பலு மலருங் களவு” (இறையனாரகப்
பொருள்-22) என்றாராகலின்.
180
இரவுக்குறி முற்றிற்று.
|