15
ஒருவழித் தணத்தல்
15.1 அகன்றணைவுகூறல்
அகன்றணைவுகூறல் என்பது அலரறிவுறுத்ததோழி,
இத்தன்மையை நினைந்து நீ சிலநாளாகன்றணைவையாயின் அம்பலு மலருமடங்கி இப்பொழுதே அவளுக்குப்
பழியில்லையா மெனத் தலைமகனுக்கிசைய அகன்றணைவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
181. புகழும் பழியும்
பெருக்கிற்
பெருகும் பெருகிநின்று
நிகழும் நிகழா நிகழ்த்தினல்
லாலிது நீநினைப்பின்
அகழும் மதிலும் அணிதில்லை
யோனடிப் போதுசென்னித்
திகழு மவர்செல்லல்
போலில்லை
யாம்பழி
சின்மொழிக்கே.
181
______________________________________________________________
15.1. வழிவேறு படமன்னும்
பழிவேறு படுமென்றது.
இதன் பொருள்: புகழும் பழியும்
- காரணவசத்தாற்பிறந்த புகழும் பழியும்; பெருக்கின் பெருகும் - அக்காரணங்களை மிகச் செய்தொருவன்
வளர்க்குமாயிற் றாம்வளரும்; நிகழ்த்தின் - அக்காரணங்களை யிடையறாமற்செய்து நிகழ்த்துவனாயின்;
பெருகிநின்று நிகழும் - அவ்வாறு வளர்ந்து நின்று மாயாதுளவாய்ச் செல்லும்; அல்லால் நிகழா -
இவ்வாறல்லது அவைதாமாக நிகழா; அதனான், இது நீ நினைப்பின் - இப்பெற்றியை நீ கருதுவை
யாயின்; அகழும் மதிலும் அணி தில்லையோன் அடிப்போது-அகழையு மதிலையுமணிந்த தில்லைக்கண்ணானுடைய
அடியாகிய போதுகள்; சென்னித் திகழுமவர் செல்லல் போல் - தஞ்சென்னிக்கண் விளங்கும் பெரியோரது
பிறவித்துன்பம்போல; சில்மொழிக்குப் பழி இல்லையாம்-இச்சின்மொழிக்குப்பழி யிப்பொழுதே
யில்லையாம்; நீ நினையாமையிற் பழியாகாநின்றது எ-று.
நிகழுநிகழா நிகழ்த்தி
னல்லாலென்புழி நிரனிறையாகக் கூட்டப்பட்டது. அகழுமதிலு மலங்காரநீர்மையவென்பது போதர, அணிதில்லை
யென்றார். அகழுமதிலுமழகுசெய்தவென எழுவா
|