பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
359

15

ஒருவழித் தணத்தல்

15.2 கடலொடுவரவு கேட்டல்

   
கடலொடுவரவு கேட்டல் என்பது ஒருவழித்தணத்தற் காற்றாது வருந்தாநின்ற தலைமகள், நம்மைவிட்டுப்போனவர் மீண்டுவரும்பரி சுனக்குரைத்தாரோவெனக் கடலொடு தலைமகன் வரவு கேளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

182. ஆரம் பரந்து திரைபொரு
        நீர்முகில் மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி
        தோன்றுந் துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன
      ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றி யெற்றிச்
      சிறந்தார்க்குஞ் செறிகடலே.

182

___________________________________________________________

யாக்கியுரைப்பினுமமையும், வழிவேறுபடுதல் - இவளையெய்து முபாயங் களவன்றி வரைவாய் வேறுபடுதல்.  மன்னும் : அசைநிலை, பழிவேறுபடுதல்-பழித்தன்மை திரிந்து கெடுதல். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன் : அலரறிவுறீஇ வரைவுகடாதல்.

181

15.2.  மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி
     மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.

   
இதன் பொருள்:
புலியூர்ப் புனிதம் சீர் அம்பர் சுற்றி- புலியூர்க்கணுளனாகிய தூயோனது புகழையுடைய அம்பரைச் சூழ்ந்து; எற்றி - கரையைமோதி ; சிறந்து ஆர்க்கும் செறிகடலே - மிக்கொலிக்கும் வரையிகவாத கடலே; ஆரம் பரந்து திரைபொரு நீர் முத்துப்பரந்து திரைக டம்முட்பொருங் கடனீர்; முகில் மீன் பரப்பிச் சீர் அம்பரத்தின் திகழ்ந்து-முகிலையு மீனையுந் தன்கட் பரப்பிச் சீர்த்த வாகாயமேபோல விளங்கி; ஒளிதோன்றும் துறைவர்-ஒளிபுலப்படுத்துந் துறையையுடையவர்; சென்றார் - நம்மைவிட்டுச் சென்றவர்; போரும் பரிசு புகன்றனரோ - மீண்டுவரும்பரிசு உனக்குக் கூறினரோ? உரை எ-று.

    பரப்பியென்னும் வினையெச்சம் சீரம்பரமென்னும் வினைத் தொகையின் முன்மொழியோடு முடிந்தது. பரப்பி விளங்குமென ஒருசொல் வருவித்து முடிப்பினுமமையும், பரப்பி யென்பதற்கு, முன்