பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
360

15

ஒருவழித் தணத்தல்

15.3 கடலொடுபுலத்தல்

   
கடலொடு புலத்தல் என்பது கடலொடு வரவுகேட்ட தலைமகள், அது தனக்கு வாய்திறவாமையின் என்வளை கொண்டு போனார் திறம் யான்கேட்க நீ கூறாதொழிகின்ற தென்னெனப்பின்னும் அக்கடலொடு புலந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

183. பாணிகர் வண்டினம் பாடப்பைம்
        பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன்
      னைத்துறைச் சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
      றார்திறம் வாய்திறவாய்

     பூணிகர் வாளர வன்புலி

      யூர்சுற்றும் போர்க்கடலே.

183

______________________________________________________________

மீன்பரப்பி (தி.8 கோவை பா.130) யென்பதற்குரைத்ததுரைக்க. திகழ்ந்தென்றதனான் ஒளிமிகுதிவிளங்கும். போதருமென்பது போருமென இடைக்குறைந்து நின்றது. ஈண்டு ஏனையுவம முண்மையின், உள்ளுறையுவமமின்மையறிக.

 182

15.3.  செறிவளைச் சின்மொழி
      எறிகடற் கியம்பியது.

    இதன் பொருள் :
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே - பூணையொக்குமொளியையுடைய அரவை யணிந்தவனது புலியூரைச்சூழ்ந்த கரைபொருதலையுடைய கடலே; பாண் நிகர் வண்டு இனம் பாட - பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று பாட; பைம்பொன் தரு வெண் கிழி - தாதாகிய பசும் பொன்னைப்புலப்படுத்தாநின்ற போதாகிய வெண்கிழியை; தம் சேண் நிகர்காவின் வழங்கும் புன்னைத் துறைச் சேர்ப்பர் - தமது சேய்மைக்கண் விளங்குங் காவினின்று அவற்றிற்குக் கொடுக்கும் புன்னைகளையுடைய துறையையணைந்த சேர்ப்பையுடையராகிய; திங்கள் வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் - திங்களினொளிபோலு மொளியையுடைய என்வெள்வளையைத் தம்மொடு கொண்டுபோனவரது திறத்தை;  வாய்திறவாய் - எமக்குக் கூறுகின்றிலை? நீ கூறாதொழிகின்றதென்! எ-று,