பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
361

15

ஒருவழித் தணத்தல்

15.4 அன்னமோடாய்தல்

   
அன்னமோடாய்தல் என்பது கடலொடுபுலந்து கூறிய தலைமகள், புன்னையொடுபுலந்து, அகன்றவர் அகன்றே யொழிவரோ? யானறிகின்றிலேன்; நீயாயினுஞ் சொல்லுவாயாக வென அன்னமோடாய்ந்து வரவுகேளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

184. பகன்தா மரைக்கண் கெடக்கடந்
        தோன்புலி யூர்ப்பழனத்
    தகன்தா மரையன்ன மேவண்டு
        நீல மணியணிந்து
    முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி
        புன்னையின் னும்முரையா
    தகன்றா ரகன்றே யொழிவர்கொல்
        லோநம் மகன்றுறையே.

184

_______________________________________________

கிழிதமென்று கிழிக்குப்பெயராக வுரைப்பாருமுளர். வாய் திறவா யென்பதற்குக் கூறுவாயாகவென் றுரைப்பினுமமையும்.

183

15.4.  மின்னிடை மடந்தை
      யன்னமோ டாய்ந்தது.

   
இதன் பொருள்:
 பகன் தாமரைக் கண் கெட - பகன் என்னும் பெயரையுடைய ஆதித்தனது தாமரைபோலுங் கண்கெட; கடந்தோன் புலியூர்ப் பழனத்து அகன் தாமரை அன்னமே - அவனை வென்றவனது புலியூரைச்சூழ்ந்த பழனத்தின் கணுண்டாகிய அகன்ற தாமரைக்கண்வாழும் அன்னமே; வண்டு நீல மணி அணிந்து - வண்டாகிய நீலமணியை யணிந்து; செம்பொன் முத்து அணி - தாதாகிய செம்பொன்னையும் அரும்பாகிய முத்தையுமணிந்த; முகன் தாழ் குழைப் புன்னை - முகத்துத் தாழ்ந்த குழையையுடைய புன்னை; இன்னும் உரையாது-இந்நிலைமைக்கண்ணு மொன்றுசொல்லுகின்ற தில்லை; அகன்றார் நம் அகன்துறை அகன்றே யொழிவர் கொல்லோ-அகன்றவர் நமதகன்றதுறையை யகன்றே விடுவாரோ? அறியேன்; நீயுரை எ-று.

    முகன்றாழ் குழையென்பது இருபொருட்படநின்றது. யானித் தன்மை யேனாகவும் மணியணிந்தின்புற்று நிற்கின்ற புன்னை