பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
362

15

ஒருவழித் தணத்தல்

15.5 தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்

   
தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் என்பது அன்னமொடு வரவுகேட்ட தலைமகள், அதுவும் வாய்திறவாமையின், இனியவர் வருகின்றாரல்லர்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே; இதனை நீ யழியாதொழிவாயென அவன்சென்ற தேர்வழி நோக்கிக் கடலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

185. உள்ளு முருகி யுரோமஞ்
        சிலிர்ப்ப வுடையவனாட்
    கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்
        தான்குனிக் கும்புலியூர்
    விள்ளும் பரிசுசென் றார்வியன்
        தேர்வழி தூரற்கண்டாய்
    புள்ளுந் திரையும் பொரச்சங்கம்
        ஆர்க்கும் பொருகடலே.

185

_____________________________________________________________

எனக்கொன்று சொல்லுமோ? அன்னமே, எனக்கு நீ கூறென்பது கருத்து. ஈண்டு நம்மோடு தாம்விளையாடும் விளையாட்டை மறந்தேவிடுவாரோ வென்னுங்கருத்தான், நம்மகன்றுறையை யகன்றேயொழிவர் கொல்லோ வென்றாள்.

184

15.5.  மீன்றோய் துறைவர் மீளு மளவு
     மான்றேர் வழியை யழியே லென்றது.

   
இதன் பொருள்; புள்ளும் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொருகடலே - புள்ளுந்திரையுந் தம்முட்பொரச் சங்கொலிக்குங் கரை பொருங்கடலே; உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப - உள்ளுமுருகி மெய்ம்மயிர் சிலி்ர்ப்ப; உடையவன் ஆட்கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் - உடையவனாகிய தானாட்கொள்ளு மடியாருள் எமக்கோர் கூட்டத்தைத் தந்தவன் நின்று கூத்தாடும்; புலியூர் விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி - புலியூரை நீங்கும்வண்ணஞ் சென்றவரது பெரிய தேர்போன வழியை; தூரல் கண்டாய் - நின்றிரைகளாற் றூராதொழியவேண்டும்; எம்முயிர்க்குப் பற்றுக்கோடினியிதுவே எ-று.

    உள்ளுமென்ற வும்மையாற் புறத்துக்கண்ணீர் தழுவப்பட்டது. ஆட்கொள்ளுமவர் பெருமை தோன்ற உடையவனென அவன்