பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
363

15

ஒருவழித் தணத்தல்

15.6 கூடலிழைத்தல்

   
கூடலிழைத்தல் என்பது தேர்வழிநோக்கிக் கடலொடு கூறா நின்ற தலைமகள், இம்மணற்குன்றின்கண் நீத்தகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்ந்து இவ்விடத்தே தர வல்லையோ வெனக் கூடற் றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

186. ஆழி திருத்தும் புலியூ
        ருடையான் அருளினளித்
    தாழி திருத்தும் மணற்குன்றின்
        நீத்தகன் றார்வருகென்

______________________________________________________________

பெருமை விளக்கும் பெயராண்டுக்கூறினார். விள்ளுதல் செலவான் வருங் காரியமாதலின், விள்ளும் பரிசுசென்றாரென்றாள். கண்டாயென்பது முன்னிலையசைச்சொல். குனிக்கும் புலியூர் நுகர்ச்சியை நினையாது நீங்கிய வன்கண்மையார் இனிவருவரென்னு நசையிலம்; அவர் தேர்ச்சுவடாயினும் யாங்காண நீ யதனையழியாதொழி யென்பது கருத்து. விள்ளும்பரிசு சென்றாரென்பதற்குப் புலியூரை நீங்கினாற் போல யான்றுன்புறும்வண்ண மெனினுமமையும். விள்ளுதல் வாய்திறத்தலென்று, அலர்கூறி நகும்வண்ணஞ் சென்றவரெனினுமமையும். பொரச்சங்கமார்க்கு மென்புழிப் பொருஞ்சங் கொலியுமென வொருபொருடோன்றியவாறு கண்டு கொள்க. கூட்டந் தந்தாரென்று பாடமோதி ஆட்கொள்ளு மவரைப்போலின்புற எமக் கோர் புணர்ச்சியைத் தந்தாரெனத் தலைமகன் மேலேறவுரைப் பாருமுளர். அலங்காரம்: அல்பொருட்டற் குறிப்பேற்றம்.

185

15.6.  நீடலந் துறையிற்
     கூடல் இழைத்தது.


   
இதன் பொருள்: ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து - ஆழிசூழ்ந்த மண்முழுதையுந் திருத்தும் புலியூரை யுடைய வன தருள்போல இன்புறவளித்து; ஆழி திருத்தும் மணற் குன்றின் நீத்து அகன்றார் வருகென்று - கடல் வந்து திருத்துமணற் குன்றின்கண் என்னை நீத்தகன்றவர் வரவேண்டுமென்று; ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி நையாமல்-கூடலையிழைத்துச் சுழிக் கணக்கைச் சொல்லி யான்வருந்தாமல்; ஐய - ஐயனே; வாழி - வாழ் வாயாக; உள்ளம்