பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
364

ஒருவழித் தணத்தல்

    றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
    வாழி திருத்தித் தரக்கிற்றி
        யோவுள்ளம் வள்ளலையே.

186

15.7 சுடரொடுபுலம்பல்

   
சுடரொடு புலம்பல் என்பது கூடலிழைத்து வருந்தாநின்ற தலைமகள், துறைவர்போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தா நின்றன: அதன்மேல் நீயுமேகாநின்றாய்; யானினியுய்யுமா றென்னோ வெனச் செல்லாநின்ற சுடரொடு புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்-

187. கார்த்தரங் கந்திரை தோணி
        சுறாக்கடல் மீன்எறிவோர்
    போர்த்தரங் கந்துறை மானுந்
        துறைவர்தம் போக்குமிக்க

______________________________________________________________

திருத்தி வள்ளலைத் தரக்கிற்றியோ - அவ னுள்ளத்தை நெகிழ்த்து வள்ளலையீண்டுத்தரவல்லை யாயின் யானிரக்கின்றேன் எ-று.

    முதற்கணாழி: ஆகுபெயர். ஆழிதிருத்தும் புலியூரென்பதற்குப் பிறவுமுரைப்ப. திரைவந்து பெயரும் பெருமணலடைகரையைப் பின்னினையாத கொடியோர் இனிவருதல் யாண்டைய தென்னுங் கருத்தான், ஆழிதிருத்து மணற்குன்றி னீத்தகன்றாரென்றாள். ஐயவென்றது கூடற்றெய்வத்தை. நீடலந்துறை யென்பதற்குக் கமழலந்துறைக் குரைத்தது (தி. 8 கோவை பா. 88) உரைக்க.

186

15.7.  குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப
      மணமலி குழலி மனம்புலம் பியது.


   
இதன் பொருள் : கார்த் தரங்கம்-கரியதிரையும்; திரை தோணி-திரையாநின்றதோணியும்; சுறா-சுறாவும்; மீன் எறிவோர்-மீனெறிவோரும்; கடல்-கடலும்; போர்த் தரு அங்கம் - போரைத்தரு மங்கங்களையும்; துறை-அக்களத்தையும்; மானும் துறைவர் போக்கும்-ஒக்குந் துறையையுடையவரது பிரிவும்; மிக்க தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும்-சிறந்த தூயோராகிய அரியயர்களுடைய வென்பையணிந்தவனது