பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
365

ஒருவழித் தணத்தல்

    தீர்த்தரங் கன்தில்லைப் பல்பூம்
        பொழிற்செப்பும் வஞ்சினமும்
    ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
        மாறென்கொ லாழ்சுடரே.

187

15.8 பொழுதுகண்டு மயங்கல்

   
பொழுதுகண்டு மயங்கல் என்பது சுடரொடு புலம்பா நின்றவள், கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர்;  அதன்மேலிவ் விடத்து மீனுண்ட வன்னங்களும் போய்த் தஞ்சேக்கைகளையடைந்தன; இனி யானாற்றுமாறென்னோவென மாலைப் பொழுது கண்டு மயங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

188. பகலோன் கரந்தனன் காப்பவர்
        சேயர்பற் றற்றவர்க்குப்
    புகலோன் புகுநர்க்குப் போக்கரி
        யோனெவ ரும்புகலத்

___________________________________________________________

தில்லைவரைப்பினுண்டாகிய பல்பூம் பொழிற்கண் நின்னிற் பிரியேனென்று சொல்லும்  வஞ்சினமும்; ஆர்த்தர் அங்கம் செய்யும் - என் மேனியை நோயுற்றார் மேனியாகச் செய்யாநின்றன; ஆழ் சுடரே - வீழாநின்ற சுடரே; உய்யுமாறு என் கொல் - யானுய்யு நெறியென்னோ? கூறுவாயாக எ-று.

    குதிரைத்திரள் தரங்கத்திற்கும், தேர் தோணிக்கும், யானை சுறாவிற்கும், காலாள் மீனெறிவோர்க்கும், போர்க்களங் கடற்கும் உவமையாகவுரைக்க. தரங்க முதலாயின வற்றாற் போரைத் தருமங்கத்தையுடைய களத்தை யொக்குந் துறை யென மூன்றாவது விரித்துரைப்பாருமுளர். இதற்கு அங்கத்துறை யென்றது மெலிந்து நின்றது. போரைத் தருமங்க மென்பதனைத் தொகுக்கும் வழித்தொகுத்தார். துறைவர்போக்கும் தில்லைவரைப்பிற் குளுறவும் என்னா மென்னு மச்சத்தளாய், ஆர்த்தரங்கஞ் செய்யுமென்றாள்.

187

15.8.  மயல்தரு மாலை வருவது கண்டு
     கயல்தரு கண்ணி கவலை யுற்றது.


   
இதன் பொருள்: பகலோன் கரந்தனன் - கதிரவன் மறைந்தான்; காப்பவர் சேயர்-இம்மாலைக்காலத்துவருந் துன்பத்தைக் காக்குமவர்