பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
367

இன

ஒருவழித் தணத்தல்

    இன்னு மறிகில வாலென்னை
        பாவம் இருங்கழிவாய்
    மன்னும் பகலே மகிழ்ந்திரை
        தேரும்வண் டானங்களே.

189

_______________________________________________________________

வண்டானங்கள் - என்னாற்றமைக்குப் பரிகாரமாவதி யாதுஞ் சிந்தியாது இருங்கழியிடத்துப் பகலேபுகுந்து விரும்பித் தமக்குணவு தேடும் வண்டானங்களாகிய குருகுகள்; உள் நோய் இன்னும் அறிகில-என்னுண்ணோயை யிந்நிலைமைக்கண்ணு மறிகின்றனவில்லை; என்னை பாவம்-இஃதென்னை பாவம்! எ-று.

    பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி மின்னும் - பொன்போலப் பொலிந்து மாணிக்கம்போல விட்டு விளங்கிப் பவளம்போலமின்னும்; சடையோன் புலியூர் விரவாதவரின் (உறும்) உள்நோய்-சடையையுடையவனது புலியூரைக் கலவாதாரைப்போல யானுறுமுண்ணோ யெனக்கூட்டுக.

   
உறுமென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. முன்னறிந்தனவில்லை யாயினும் இனியறியவேண்டுமென்பது   கருத்து. புலியூரை விரவாதார் கண்ணோட்டமிலராகலிற் புலியூரை விரவாத வரினின்னுமறிகில வென்றியைத் துரைப்பினு மமையும். நிரனிறையாகக் கொள்ளாது எல்லா மெல்லாவற்றின்மேலு மேறவுரைப்பினுமமையும். மன்னும்: அசைநிலை.

189