பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
368

15

ஒருவழித் தணத்தல்

15.10 பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்

   
பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல் என்பது பறவையொடு வருந்தாநின்றவள், இவையென்வருத்தங்கண் இவள் வருந்தாமல் விரைய வரவேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தங்கை குவியாநின்றன; ஆதலால் என்மாட் டன்புடையன போலுமெனப் பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

190. கருங்கழி காதற்பைங் கானலில்
        தில்லையெங் கண்டர்விண்டார்
    ஒருங்கழி காதர மூவெயில்
        செற்றவொற் றைச்சிலைசூழ்ந்

_____________________________________________________________


15.10.  முருகவிழ் கான
      லொடுபரி வுற்றது.

   
இதன் பொருள்:
 தில்லை எம் கண்டர் - தில்லைக்கணுள ராகிய எம்முடைய கண்டர்; விண்டார் ஒருங்கு அழி காதரமூவெயில் செற்ற-பகைவரொருங்கேயழியு மச்சத்தையுடைய மூவெயிலைச் செற்ற; ஒற்றைச் சிலை சூழ்ந்து-தனிவில்லைச் சூழ்ந்து; அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று-அரியவாகிய மிக்ககாதங்களைப் போகாநின்றது என்றூழ் இனி யிவளெங்ஙனமாற்றுமென்று வருந்தி; கருங்கழி காதல் பைங்கானலின் அலந்து கண்ணீர் வரும் - கருங்கழியின்கண்ணுங் காதலையுடைய பைங்கானலின் கண்ணுமுள வாகித் துன்புற்றுக் கண்ணீர்வாராநின்ற; கழிகாதல் வனசங்கள்-கழிகாதலையுடைய தாமரைகள்; மலர்க்கைகள் கூப்பும் - விரைந்துவர வேண்டுமென்று அஞ்ஞாயிற்றை நோக்கித் தம் மலராகிய கைகளைக் கூப்பியிரவாநின்றன; இவையென்மாட் டன்புடையன போலும் எ-று.

   
கானலின் வனசங்களெனவும், தில்லையெங்கண்டர் செற்றவெனவுங் கூட்டுக. கானலிற் கைகூப்புமென வியைப்பினுமமையும். கானற்பொய்கையின் வனசம் கானலின் வனசமெனப் பட்டன. அலந்து கண்ணீர்வருமென்பது இருபொருட்டாகலின், மலர்ந்து கள்ளாகிய நீர் வருமென்றுரைக்க. இப்பொருட்கு அலர்ந்தென்பதிடைக்குறைந்து நின்றதாகக் கொள்க. கதிரோன்றம்மைப் பிரியவாற்றாது கடிது வரவேண்டுமென வனசங்கள் கைகூப்பா நின்றன வென்று அவற்றிற்கிரங்கினாளாக வுரைப்பினுமமையும். அலர்ந்த வென்பது பாடமாயின், அலர்ந்த வனசமென வியையும்.

190