பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
369

ஒருவழித் தணத்தல்

    தருங்கழி காதம் அகலுமென்
        றூழென் றலந்துகண்ணீர்
    வருங்கழி காதல் வனசங்கள்
        கூப்பும் மலர்க்கைகளே.

190

15.11 அன்னமோடழிதல்

   
அன்னமோடழிதல் என்பது பங்கயத்தை நோக்கிப் பரிவுறாநின்றவள், உலகமெல்லாந் துயிலாநின்ற விந்நிலைமைக் கண்ணும் யான்றுயிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாது தான்றன் சேவலைப்பொருந்திக் கவற்சியின்றித் துயிலாநின்றதென அன்னத்தோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

191. மூவல் தழீஇய அருண்முத
        லோன் தில்லைச்செல்வன்முந்நீர்
    நாவல் தழீஇயவிந் நானிலந்
        துஞ்சும் நயந்தவின்பச்

_____________________________________________________________

15.11.  இன்னகையவ ளிரவருதுயரம்
      அன்னத்தோ டழிந்துரைத்தது.

   
இதன் பொருள்: மூவல் தழீஇய அருள் முதலோன் - மூவலைப் பொருந்திய அருளையுடைய முதல்வன்; தில்லைச் செல்வன்-தில்லைக்கணுளனாகிய செல்வன்; முந்நீர் நாவல் தழீஇய இந்நானிலம் துஞ்சும் - அவனுடைய கடலாற்சூழப்பட்ட நாவலைப் பொருந்திய இந்நானிலமுழுதுந் துஞ்சாநின்றது; யான் துயிலாச் செயிர் எம்காவல் தழீஇயவர்க்கு ஓதாது -இப்பொழுதினும் யான் றுயிலாமைக்குக் காரணமாகிய வருத்தத்தை எமது காவலைப் பொருந்தினவருக்குரையாதே; அளிய களி அன்னம் - அளித்தாகிய களியன்னம்; சென்று - இவ்விடத்து நின்றும்போய்; நயந்த இன்பச்சேவல் தழீஇத் தான் துஞ்சும்-தானயந்த வின்பத்தைச் செய்யுஞ் சேவலைத்தழுவி ஒருகவற்சியின்றித் தான்றுயிலாநின்றது; இனியிது கூறுவார் யாவர்? எ-று.

    மூவலென்பது ஒரு திருப்பதி. பாலைக்கு நிலமின்மையின், நானிலம் எனப்பட்டது. நயந்த சேவலைப்பொருந்திய களிப்பால்