New Page 1
ஒருவழித் தணத்தல்
சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
யான்துயி லாச்செயிரெங்
காவல் தழீஇயவர்க் கோதா
தளிய களியன்னமே.
191
15.12 வரவுணர்ந்துரைத்தல்
வரவுணர்ந் துரைத்தல், என்பது
தலைமகளன்னத் தோடழிந்து வருந்தாநிற்ப, தலைமக னொருவழித்தணந்து வந்தமை சிறைப் புறமாகவுணர்ந்த
தோழி, வளைகள் நிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெகிழ்ந்துருகாநின்றது; கண்கள்
துயிலின்றிக் கலுழாநின்றன; இவை யெல்லாம் யான் சொல்ல வேண்டுவதில்லை; நீயேகண்டாய்;
இதனைச்சென்று அவர்க்குச் சொல்லுவாயென மதியொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
192. நில்லா வளைநெஞ்சம் நெக்குரு
கும்நெடுங் கண்துயிலக்
கல்லா கதி்ர்முத்தங்
காற்று
மெனக்கட் டுரைக்கதில்லைத்
________________________________________________
அன்னஞ் சென்றுரையாமை யல்லது
அவரெம்மைக்காவாது விடாரென்னுங் கருத்தான், எங்காவறழீஇயவர்க்கென்றாள். ஓதாதென்பதனை
முற்றாகவுரைப்பினு மமையும். நெய்தற்றிணை கூறுவார் சோத்துன்னடியம் (பா.173) என்பது தொட்டுப்
புகழும் பழியும் (பா.181) என்னுங்காறும் வரப் பாட்டொன்பதும் இரங்கனிமித்தமாகக் கூறி,
ஒருவழித்தணத்தற் றுறையிடத்து, ஆரம்பரந்து (பா.182) என்பது தொட்டு இதன்காறும்வர இப்பாட்டுப்
பத்தும் இரங்கலே கூறுதலான், திணை: நெய்தல்; என்னை? வாட்டம் உரிப்பொருளாதலின். கைகோள்:
கற்பு. மெய்ப்பாடு: அழுகை.: பயன்: அயர் வுயிர்த்தல்.
191
15.12. சென்றவர் வரவுணர்ந்து
நின்றவள் நிலைமை
சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத்
துரைத்தது.
இதன் பொருள்:
எல் ஆர் மதியே-ஒளியார்ந்த மதியே; தில்லைத் தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற
செல்லல் கண்டாய்-தில்லைக்கணுளனாகிய தொல்லோனது அருளுடையா ரல்லாதாரைப்போலக் கண்ணோட்டமின்றிப்
போனவர் போதலா
|