New Page 2
ஒருவழித் தணத்தல்
தொல்லோ னருள்களில்
லாரிற்சென்
றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை
யான்இன் றிரக்கின்றதே.
192
15.13 வருத்தமிகுதி கூறல்
வருத்தமிகுதி கூறல் என்பது சிறைப்புறமாக
மதியொடு வருத்தங்கூறிச் சென்றெதிர்ப்பட்டு வலஞ்செய்துநின்று, நீ போய், அவள் படாநின்ற
வருத்தம் என்னாற்சொல்லுமளவல்லவென வரைவு தோன்றத் தலைமகளது வருத்தமிகுதி தோழி கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
193. வளருங் கறியறி யாமந்தி
தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம்
பாதன தங்கமெங்கும்
_____________________________________________________________
லுண்டாகிய இன்னாமையை நீயேகண்டாய்
யான் சொல்ல வேண்டுவதில்லை; வளை நில்லா - வளைகணிறுத்த நிற்கின்றன வில்லை; நெஞ்சம் நெக்கு
உருகும் - நெஞ்சு நெகிழ்ந்துருகாநின்றது; நெடுங்கண் துயிலக்கல்லா கதி்ர் முத்தம் காற்றும் - நெடுங்கண்
கடுயிலாவாய்க் கண்ணீ்ர்த்துளியாகிய கதி்ர் முத்தங்களை விடாநின்றன; எனக் கட்டுரைக்க -
என்று அவர்க்குச் சொல்வாயாக; நின்னை யான் இன்று இரக்கின்றது இது-நின்னை யானின்றிரக்கின்றதிது
எ-று.
துயிலக்கல்லாவென்பது ஒருசொல். முத்தங்காலு
மென்பதூஉம் பாடம். எல்லாமதியே யென்பது பாடமாயிற் செல்லலெல்லாமென்று கூட்டியுரைக்க. மெய்ப்பாடு:
அச்சம். பயன்: வரைவுகடாதல்.
192
15.13. நீங்கி யணைந்தவற்குப்
பாங்கி பகர்ந்தது.
இதன் பொருள்:
வளரும் கறி அறியா மந்தி தின்று-வளராநின்ற மிளகு கொடியைத் தமக்கேற்றவுணவென்றறியாத இளையமந்திதின்று;
மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண்சிலம்பா-
|