வ
ஒருவழித் தணத்தல்
விளரும் விழுமெழும்
விம்மும்
மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி
யோன்புலி
யூரன்ன வொண்ணுதலே.
193
____________________________________________________________
வருத்தத்திற்கிடமாய் நிலைதளரும்
பெரியவரைகளை யுடைய தண்சிலம்பையுடையாய்; வெண் மா மதி நின்று ஒளிரும் சடைமுடியோன் புலியூர்
அன்ன ஒள் நுதல் - வெள்ளிய பெரிய மதி நின்று விளங்குஞ் சடையானியன்ற முடியையுடையவனது புலியூரையொக்குமொண்ணுதல்;
தனது அங்கம் எங்கும் விளரும் - தன் மேனிமுழுதும் பசக்கும்; விழும்-அமளிக்கண் விழாநிற்கும்;
எழும் - எழாநிற்கும்; விம்மும்-பொருமா நிற்கும்; மெலியும்-நின்வன்கண்மையை நினைந்து மெலியாநிற்கும்;
அதனாலின்ன நிலைமையளென்றென்னாற் சொல்லப்படாது எ-று.
வளருமிளங்கறி கண்ணிற்கினிதாயிருத்தலின்
இது நமக்குத் துய்க்கப்படாதென்றுணராத இளமந்தி அதனைத்தின்று வருந்துமாறு போலக் கண்ணுமனமுமகிழு
முருவினையாகிய நின்னை நின்பெருமையுணரா தெதி்ர்ப்பட்டு வருந்தாநின்றாளென உள்ளுறை காண்க. மெய்ப்பாடும்
பயனும் அவை.
இவ்வாறு ஒருவழித்தணந்து
வந்து வரைவுமாட்சிமைப் படவும் பெறும். அன்றியும் உடன்போக்கு நிகழப்படும்.
193
|