பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
373

16

16. உடன்போக்கு

இவ்வாறொருவழித்தணத்தல் நிகழாதாயின், உடன் போக்கு நிகழும். அதுவருமாறு-

    பருவங் கூறல் படைத்துமொழி தல்லொடு
    மருவமர் கோதையை மகட்பேச் கரைத்தல்
    பொன்னணி வுரைத்தல் பொருள்விலை கூற
    லன்னமென் னடையா ளருமைகேட் டழித
    றளர்வறிந் துரைத்த றாழ்குழ லாட
    னுளநினை வுரைத்த லுடன்கொண்டு சேறற்
    கருமை யுரைத்த லாதரங் கூறன்
    மருவிய தடங்கயல் வாழா ளென்றல்
    பொருவரு கற்பின் புனைநல னுரைத்த
    றுணிந்தமை கூற றுணிவு கேட்ட
    றுணிவறி வித்த றொல்லை நாண்விட
    றுணிவெடுத் துரைத்தல் கொண் டகலென வுரைத்த
    லடிவழி நினைந்துநின் றவனுளம் வாடல்
    கொடியிடை யாளைக் கொண்டுசென் றுய்த்த
    லோம்படுத் துரைத்தல் வழிப்படுத் துரைத்த
    றேம்படு கோதையைத் திறலடு வேலோன்
    பையக் கொண்டேகல் பயங்கெட வுரைத்தன்
    மையமர் கண்ணியை வழியயர் வகற்ற
    னெறிவிலக் கல்லொடு நெறியிடைக் கண்டவர்
    செறிவெடுத் துரைத்தல் சேயிழை யாளுடன்
    வழிவிளை யாடல் வழியெதிர் வருவோ
    ரெழினக ரணிமை யிதுவென வுரைத்த
    னகர்காட் டல்லொடு நகரிடைப் புக்குப்

____________________________________________________________

    உடன்போக்கு - இதன் பொருள்: பருவங்கூறல், மகட்பேச்சுரைத்தல், பொன்னணி வுரைத்தல், அருவிலையுரைத்தல், அருமைகேட்டழிதல், தளர்வறிந் துரைத்தல், குறிப்புரைத்தல், அருமையுரைத்தல், ஆதரங்கூறல், இறந்து பாடுரைத்தல், கற்புநல னுரைத்தல், துணிந்தமைகூறல், துணிவொடு வினாவல், போக்கறிவித்தல், நாணிழந்துவருந்தல், துணிவெடுத் துரைத்தல், குறியிடங்கூறல், அடியொடு வழிநினைந்தவனுளம் வாடல், கொண்டு சென்றுய்த்தல், ஓம்படுத்துரைத்தல், வழிப்படுத்துரைத்தல், மெல்லக்கொண்டேகல், அடலெடுத்துரைத்தல், அயர் வகற்றல், நெறிவிலக்கிக்கூறல், கண்டவர்மகிழ்தல், வழிவிளை