பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
375

16

உடன் போக்கு

16.1 பருவங்கூறல்

   
பருவங்கூறல் என்பது அலரறிவுறுத்த தோழி, இவண் முலை முதி்ர்வு கண்டமையான் மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங் கூடும்; அது படாமனிற்பநீ முற்பட்டு வரைவாயாக வெனத் தலைமகனுக்குத் தலைமகளது பருவங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

194. ஒராக மிரண்டெழி லாயொளிர்
        வோன்தில்லை யொண்ணுதலங்
    கராகம் பயின்றமிழ் தம்பொதிந்
        தீர்ஞ்சுணங் காடகத்தின்
    பராகஞ் சிதர்ந்த பயோதர
        மிப்பரி சேபணைத்த
    இராகங்கண் டால்வள்ள லேயில்லை
        யேயெம ரெண்ணுவதே.

194

_____________________________________________________________

16.1.  உருவது கண்டவள்
அருமை யுரைத்தது.


   
இதன் பொருள்:
 ஒரு ஆகம் இரண்டு எழில் ஆய் ஒளி்ர்வோன் தில்லை ஒள் நுதல்-ஒருமேனி பெண்ணழகு மாணழகுமாகிய விரண்டழகாய் விளங்குமவனது தில்லைக் கணுளளாகிய வொண்ணுதலுடைய; அங்கராகம் பயின்று-பூசப் படுவன பயின்று; அமிழ்தம் பொதிந்து-அமிர்தத்தைப் பொதிந்து; ஈர்ஞ் சுணங்கு ஆடகத்தின் பராகம்சிதர்ந்த பயோதரம்-நெய்த்த சுணங்காகிய செம்பொன்னின் பொடியைச் சிதறின முலைகள்; இப்பரிசே பணைத்த இராகம் கண்டால்-இப்படியே பெருத்த கதிர்ப்பைக்கண்டால்; வள்ளலே-வள்ளலே; எமர் எண்ணுவது இல்லையே-இவண் மாட்டெமர் நினைப்பதில்லையே? Êசிலவுளவாம் எ-று.

   
இராகம் வடமொழிச்சிதைவு; ஈண்டு நிறமென்னும் பொருட்டு. இராகம் முடுகுதலென்பாருமுளர். தில்லையொண்ணுத லிராகனெ வியையும்: மெய்ப்பாடும் பயனும் அவை.

194