16
உடன்
போக்கு
16.4 அருவிலையுரைத்தல்
அருவிலை யுரைத்தல் என்பது பொன்னணி
வுரைப்பக் கேட்ட தலைமகன் யான் வரைவொடு வருதற்கு நீ முலைப்பரிசங் கூறுவாயாகவென, எல்லாவுலகமு
நல்கினும் எமர் அவளுடைய சிறிய விடைக்கு விலையாகச் செப்பலொட்டார்; இனிப் பெரிய முலைக்கு
நீ விலைகூறுவ தென்னோவெனத் தோழி விலையருமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
197. எலும்பா லணியிறை யம்பலத்
தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினுங்
கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக்
கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை
யென்நீ கருதுவதே.
197
___________________________________________________________
16.4. பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென
ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.
இதன் பொருள்: சிலம்பா-சிலம்பா;
எலும்பால் அணி இறை-எலும்புகளானலங்கரிக்கு மிறைவன்; அம்பலத்தோன்-அம்பலத்தின் கண்ணான்;
எல்லை செல்குறுவோர் நலம் பாவிய முற்றும் நல்கினும்- அவனதெல்லைக்கட் செல்லக் கருதுவாரது நன்மைபரந்த
வுலகமுழுதையும் நீ கொடுப்பினும்; கல் வரை நாடர்-எம்முடைய தமராகிய கல்வரைநாடர்; வடிக்கண்ணி
சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார்-வடுவகிர்போலுங் கண்ணையுடையாளது சிறியவிடைக்கே விலையாகச்
சொல்லுத லியையார்; கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவது-கலம்பரந்த முலையின் விலையாகயாதனை
நீ கருதுவது? ஒன்றற்கும் அவருடம்படார் எ-று.
எலும்பாற்செய்த வணியென்று
ஒருசொல் வருவித் துரைப்பாருமுளர். எல்லை சேறல் அறிவா லவனை யணுகுதல். தில்லையெல்லை யெனினுமமையும்.
அவர் நலம்பாவா விடமின்மையின் எஞ்சாமை முழுதுமென்பார், நலம்பாவியமுற்று மென்றார்; என்றது
அவர் சீவன்முத்தராயிருத்தல். அஃதாவது சீவனுடனிருக்கும்போதே
|