16
உடன்
போக்கு
16.5 அருமைகேட்டழிதல்
அருமை
கேட்டழிதல் என்பது அருவிலைகேட்ட தலைமகன், நீயவளதருமை கருதாது அவளதவயங்களிலுண்டாகிய நயத்தைப்
பற்றிவிடாது நடுங்காநின்றாய்; இனி மதியைப்பிடித்துத் தரவேண்டியழும் அறியாக் குழவியைப்போலக்
கிடந்தரற்றுவாயாக வெனத் தன்னெஞ்சோடழிந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
198. விசும்புற்ற திங்கட் கழும்மழப்
போன்றினி விம்மிவிம்மி
அசும்புற்ற கண்ணோ
டலறாய்
கிடந்தரன் தில்லையன்னாள்
______________________________________________________________
முத்தியையடைந் திருத்தல்.
முத்தியாவது எங்குமொக்க வியாத்தியை யடைந்திருத்தல். இஃது அகண்டபரிபூரண ரென்றபடி, அம்மகேளென்னுங்
குறிப்பின்கண்வந்தது. சிற்றிடைக்கே யென்னுமேகாரம்: பிரிநிலை. இவனுயர்ந்த தலைமகனாதலால்,
தன்றமரைக் கல்வரைநாடரென்றும், பேதையரென்றும் கூறினாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்:
தலைமகளதருமையுணர்த்தல்.
16.5. பெருமைநாட் டத்தவள்
அருமைகேட் டழிந்தது.
இதன்
பொருள்: அரன்
தில்லை அன்னாள் குயம் - அரனது தில்லையை யொப்பாளுடையமுலை; புற்று அரவு இடை - புற்றின் கண்வாழும்
பாம்புபோலுமிடை; கூர் எயிற்று ஊறல் - கூரிய வெயிற்றின் கணூறியநீர்; குழல் மொழியின் நயம்
பற்றி - குழலோசை போலுமொழி என விவற்றின்கட்கிடந்த இன்பத்தையே கருதி; நின்று நடுங்கித்
தளர்கின்ற நல் நெஞ்சமே-விடாது நின்று அவளதருமை கருதாயாய் நடுங்கி வருந்தாநின்ற நல்ல நெஞ்சமே;
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழப்போன்று - விசும்பைப் பொருந்திய திங்களைத் தரவேண்டி யழுங்
குழவியையொத்து; அசும்பு உற்ற கண்ணோடு விம்மி விம்மி இனிக் கிடந்து அலறாய்-நீரறாமையைப்
பொருந்திய கண்ணை யுடையையாய்ப் பொருமிப் பொருமி இனிக்கிடந்தலறுவாயாக எ-று.
|