New Page 1
உடன்
போக்கு
குயம்புற்
றரவிடை கூரெயிற்
றூறல் குழல்மொழியின்
நயம்பற்றி நின்று நடுங்கித்
தளர்கின்ற நன்னெஞ்சமே.
198
16.6 தளர்வறிந்துரைத்தல்
தளர்வறிந்துரைத்தல் என்பது
வரைவுமாட்சிமைப் படா தாயின் நீயவளையுடன்கொண்டு் போவென்பது பயப்ப, கடலை யுங்கானலையு நோக்கிக்
கண்ணீர் கொண்டு தன்னாயத்தாரை யெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள் கருதிய தின்னதென்று தெரியாதெனத்
தோழி தலைமகளது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
199. மைதயங் குந்திரை
வாரியை
நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண்
ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
_________________________________________________
குழன்மொழியினென்னும் இன்: பலபெயரும்
மைத்தொகை யிறுதிக்கண்வந்த சாரியை இன் மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை. நீங்குதல்.
198
16.6. தண்டுறைவன் தளர்வறிந்து
கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது.
இதன் பொருள்: பை
தயங்கும் அரவம் புரையும் அல்குற் பைந்தொடி-படம் விளங்கும் பாம்பையொக்கும் அல்குலையுடைய பைந்தொடி;
மை தயங்கும் திரை வாரியை நோக்கி-கருமை விளங்குந் திரையையுடைய கடலையுநோக்கி; மடல் அவிழ்
பூங்கைதை கானலை நோக்கி-மடலவிழாநின்ற பூவையுடையவாகிய தாழையையுடைய கானலையுநோக்கி; கண்ணீர்
கொண்டு-கண்ணீரைக்கொண்டு; எம் கண்டர் தில்லைப் பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம்
புல்லினாள் - பின் எம்முடைய கண்டரது தில்லைக்கணுளராகிய பொய்யாதல் விளங்கும் நுண்ணிய
மருங்குலையுடைய தன்னாயத்தாராகிய நல்லாரையெல்லாம் புல்லிக்கொண்டாள்; அவள்கருதிய தொன்றுண்டு
போலும் எ-று.
|