பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
383

New Page 1

உடன் போக்கு

    சொல்லிய சீர்ச்சுடர்ந்த திங்களங்
        கண்ணித்தொல் லோன்புலியூர்
    அல்லியங் கோகைநல் லாயெல்லை
        சேய்த்தெம் அகல்நகரே.

201

16.9 ஆதரங்கூறல்

   
ஆதரங்கூறல் என்பது போக்கருமை கூறிய தலைமகனுக்கு, நின்னோடு போகப்பெறின் அவளுக்கு வெஞ்சுரமும் தண்சுரமாம்; நீ யருமைகூறாது அவளைக் கொண்டு போவெனத் தோழி தலைமகள தாதரங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

202. பிணையுங் கலையும்வன் பேய்த்தே
        ரினைப்பெரு நீர்நசையால்
    அணையும் முரம்பு நிரம்பிய
        அத்தமும் ஐயமெய்யே

____________________________________________________________

அம் கோதை நல்லாய்-அல்லியங்கோதையையுடைய நல்லாய்; மெல்லியல் கொங்கை பெரிய-மெல்லியலுடைய கொங்கைகள் பெரிய; இடை மின் நேர்-அவற்றைத் தாங்கு மிடைநுடக்கத்தான் மின்னுக்கு நேராயிருந்தது; மெல் அடி பூ-மெல்லியவடிகள் பூவேயாயிருந்தன; கல் இயல் வெம்மைக் கடம் கடுந் தீ-கல்லின் கணுண்டாகிய வெம்மையையுடைய காடு அவ்வடிக்குத் தகாததாய்க் கடிய தீயாயிருந்தது; எம் அகல் நகர் எல்லை சேய்த்து-அதன்மேல் எம்முடைய வகன்றநகரும் எல்லைசேய்த்தாயிருந்தது; அதனான் நீ கருதியது பெரிதுமரிது எ-று.

    கல்லானியன்ற கடமென வியைப்பினுமமையும். எல்லை சேய்த்தென்பன ஒரு சொன்னீர்மைப் பட்டு அகனகரென்னு மெழுவாய்க்கு முடிபாயின. வானரெல்லா மென்பதூஉம் பாடம் இதுவென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைமகணிலை யுணர்த்துதல்.

201

16.9.  அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும்
     நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது.

   
இதன் பொருள்: பிணையும் கலையும் - பிணையுங் கலையும் ; பெரு நீர் நசையால்-மிக்க நீர் வேட்கையால்; வன் பேய்த்தேரினை