பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
384

உடன் போக்கு

    இணையும் அளவுமில் லாஇறை
        யோனுறை தில்லைத்தண்பூம்
    பணையுந் தடமுமன் றேநின்னொ
        டேகினெம் பைந்தொடிக்கே.

202

16.10 இறந்துபாடுரைத்தல்

   
இறந்துபாடுரைத்தல் என்பது ஆதரங்கூறிய தோழி, நீயுடன் கொண்டு போகாயாகில் அலரானுங் காவன்மிகுதியானும் நின்னையெதிர்ப்படுதலரி- தாகலின், தடந்துறந்த கயல்போல இறந்து படுமெனத் தலைமகளதிறந்துபாடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

203. இங்கய லென்னீ பணிக்கின்ற
        தேந்தல் இணைப்பதில்லாக்
    கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
        லண்ணல் கடிகொள்தில்லைப்

__________________________________________________________

அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும்-பெரிய பேய்த்தேரினைச் சென்றணுகும் முரம்பா னிரம்பிய சுரமும்; ஐய-ஐயனே; நின்னொடு ஏகின் மெய்யே எம் பைந்தொடிக்கு-நின்னொடு சொல்லின் மெய்யாக எம்பைந்தொடிக்கு; இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப் பூந்தண் பணையும் தடமும் அன்றே - ஒப்பு  மெல்லையு மில்லாத இறையோனுறைகின்ற தில்லை வரைப்பிற் பூக்களையுடைய குளி்ர்ந்த மருதநிலமும் பொய்கையு மல்லவோ! நீயிவ்வாறு கூறுவதென்னை எ-று.

    முரம்பு - கல் விரவி யுயர்ந்திருக்குநிலம். ஏகினென்னும் வினையெச்சம் பணையுந்தடமு மாமென விரியுமாக்கத்தோடு முடிந்தது. அழல்தடம்-தீக்காய்கலம். விகாரவகையால் தடா தடமென நின்றது. அழலானிறைந்த பொய்கையெனினுமமையும். அலங்காரம்: புகழாப்புகழ்ச்சி.

202

16.10.  கார்த்தடமுங் கயலும்போன்றீர்
      வார்த்தடமுலையு மன்னனுமென்றது.

   
இதன் பொருள்: இணைப்பது இல்லாக் கங்கை அம் செஞ்சடைக்